புதிய ஆண்டு பிறக்க உள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டிற்கான ராசிபலன்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு எவ்வாறு அமையும் என்பது குறித்த விரிவான கணிப்புகள் ஜோதிட நிபுணரால் வெளியிடப்பட்டுள்ளது.
மேஷ ராசிக்காரர்களுக்கு, குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகி, பொன் பொருள் சேரும் வாரமாக இது அமையும். ராசி அதிபதி செவ்வாயின் பார்வை, உச்ச குருவின் மீது விழுவதால் குருமங்கள யோகம் உண்டாகிறது. இதனால், எதிர்பாராத பண வரவு, உதவிகள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் ஏற்ற காலம். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைக்கும். சின்னத்திரை மற்றும் சினிமா துறையினர் அதிக நற்பலன் அடைவர்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு, இது வெற்றிகரமான வாரமாக இருக்கும். ராசி அதிபதி சுக்கிரன், உச்ச குருவுடன் சேர்க்கை பெறுவதால், மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். தைரியத்துடன் மனம் விரும்பியதை சாதிப்பீர்கள். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். பணவசதி சிறப்பாக இருக்கும். வீடு கட்டும் பணி துரிதமாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். திருமண வயதில் உள்ள மகன், மகளின் திருமண முயற்சிகள் சாதகமாக அமையும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு, சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரமாக அமையும். ராசி அதிபதி புதன் ஆட்சி பலம் பெறுவதால், ஜென்ம குருவால் ஏற்பட்ட சோதனைகள் குறையும். தோற்றப்பொலிவு அதிகரிக்கும். காதலால் ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். புதிய தொழில், கூட்டுத் தொழில் துவங்க உகந்த காலம். பொருளாதார நிலையில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். திருமணத் தடைகள் அகலும். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மூலம் ஆதாயம் கிடைக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு, இது முன்னேற்றமான வாரமாக அமையும். ராசியில் குரு, சுக்கிரன் சேர்க்கை இருப்பதால், தடைபட்ட பாக்கிய பலன்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். மன உறுதி, தைரியம், நேர்மறை எண்ணம் கூடும். ஆயுள், ஆரோக்கியம் கூடும். மருத்துவ செலவுகள் குறையும். கௌரவ பதவிகள் உறுதியாகும். பொருளாதார மேன்மையும் செல்வப் பெருக்கமும் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். சக்திக்கு மீறிய கடன், தேவையற்ற பேச்சைக் குறைத்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.