MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 12 மணிநேர மின்வெட்டு: மக்கள் துயரம் – செந்தில் பாலாஜி கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 12 மணிநேர மின்வெட்டு: மக்கள் துயரம் – செந்தில் பாலாஜி கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - 12 மணிநேர மின்வெட்டு: மக்கள் துயரம் – செந்தில் பாலாஜி கண்டனம்

லைஃப் ஸ்டைல்

12 மணிநேர மின்வெட்டு: மக்கள் துயரம் – செந்தில் பாலாஜி கண்டனம்

Admin
Last updated: ஜூன் 14, 2026 1:00 மணி
Admin
Share
SHARE

“மாற்றத்தைத் தருகிறேன்” என்று கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க அரசு, ஒரு மாத காலத்திலேயே மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 6 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை நீடிக்கும் மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவிலும் சாலைகளில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தின் தலைநகரிலும் மற்ற பகுதிகளிலும் இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன் என்ற முதலமைச்சர் மவுனமாக இருக்கிறார். மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை. பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ, தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் செய்கிறார். ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள், ஹார்ட் டிஸ்க்குகள் மாயம், மின்வாரியப் பணியாளர்கள் சதி என தினமும் ஒரு கதையை ஊடகங்களிடம் கூறி மக்களை ஏமாற்றுகிறார்” என விமர்சித்துள்ளார்.

மேலும், “ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாக மின்சாரம் போக வேண்டும். விட்டுவிட்டு போவது எப்படி? அமைச்சர் கதை அளக்கிறார். கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுற்றுகிறார். ஹார்ட் டிஸ்க் திருட்டுக்கும் கரண்ட் கட்டுக்கும் என்ன சம்பந்தம்? மின்வாரியப் பணியாளர்கள் மீது பழி போடுவது தன் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகும். கரண்ட் கட் காரணம் குறித்து இப்படியா கப்சா விடுவது? த.வெ.க ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம், மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும் அவலம் தான்!” என்று சாடியுள்ளார்.

தமிழ்நாட்டின் மின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப திறமையாக நிர்வகித்து மக்களை இன்னலுக்கு உட்படாமல் காப்பதுதான் ஆட்சியின் நிர்வாகத் திறமை. அதைத்தான் எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்தது. 2021ல் 16,481 மெகாவாட் ஆக இருந்த மின் தேவை, 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கியிருக்கிறோம். இந்தியாவிலேயே மிகக் குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று ஒன்றிய அமைச்சரே பாராட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி தடையில்லா மின்சாரம் கொடுத்தோம். எண்ணற்ற மின் உற்பத்திக்கான திட்டங்கள், துணை மின் நிலையம், மின்வழித்தடம், மின்மாற்றிகள் அமைத்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 90,000 மின்மாற்றிகள் புதியதாகவும், பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்றியும் மின்வாரியத்தின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது திராவிட மாடல் ஆட்சியில்தான்! ஆகவே, நிர்வாகம் தெரியாமல் மற்றவர்கள் மீது பழி போடுவதற்கே பத்திரிக்கையாளர் சந்திப்பை பயன்படுத்துவதை மின்துறை அமைச்சர் கைவிட்டு, மின்வெட்டு பிரச்சனையை தீர்த்து பொதுமக்கள் நிம்மதியாக உறங்க, பள்ளிக்கூடங்கள் மூடாமல் இருக்க, விவசாயிகள் வேதனைக் கண்ணீர் வடிக்காமல் இருக்க த.வெ.க அரசு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:power cutSenthil Balajiசெந்தில் பாலாஜிதமிழ்நாடு மின்சாரம்தவெக அரசுமின்வெட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை ஐஐடி: 100+ வெளிநாட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு
Next Article என்.எல்.சி சுரங்கத்திற்கு கோவில் இடிப்பதா? அன்புமணி கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

இந்தியாவின் பணக்கார மாவட்டங்கள் குறித்த பட்டியல்
லைஃப் ஸ்டைல்

இந்தியாவின் டாப் பணக்கார மாவட்டங்கள்: சென்னை, மும்பை லிஸ்ட்டில் உள்ளதா?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் பணக்கார மாவட்டங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. ரங்காரெட்டி, குருகிராம், பெங்களூரு அர்பன், கௌதம் புத் நகர், சோலன் உள்ளிட்ட மாவட்டங்கள்…

3 Min Read
படுக்கையை புத்துணர்ச்சியுடன் மாற்றும் குறிப்புகள்
லைஃப் ஸ்டைல்

படுக்கையிலிருந்து துர்நாற்றம்: 5 நிமிடத்தில் தீர்வு!

உங்கள் படுக்கையிலிருந்து வரும் துர்நாற்றத்தை 5 நிமிடங்களில் போக்க எளிய வழிகள்! பேக்கிங் சோடா மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தி படுக்கையை புத்துணர்ச்சியுடன் வைத்திருங்கள்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

வெஸ்ட் இண்டீஸ் vs இலங்கை: 2வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து

ஜமைக்காவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை 2வது ஒருநாள் போட்டி கனமழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இலங்கை அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இறுதிப் போட்டி…

1 Min Read
சமையலறையில் இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்தப்படும் காட்சி
லைஃப் ஸ்டைல்

இண்டக்ஷன் அடுப்பு: வசதிக்கு பின்னால் மறைந்திருக்கும் சிக்கல்கள்

இண்டக்ஷன் அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மின்வெட்டு காலங்களில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் மாற்று சமையல் முறைகளின் அவசியம் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?