MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி: ஸ்டாலின் கடும் தாக்கு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி: ஸ்டாலின் கடும் தாக்கு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - விஜய் பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி: ஸ்டாலின் கடும் தாக்கு

லைஃப் ஸ்டைல்

விஜய் பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி: ஸ்டாலின் கடும் தாக்கு

Admin
Last updated: ஜூன் 14, 2026 6:39 காலை
Admin
Share
SHARE

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். திமுகவின் அமைப்பு ரீதியிலான 78 மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட, மாநகர, மகளிர் அணி நிர்வாகிகள், மகளிர் தொண்டரணி நிர்வாகிகள், மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி பேசுகையில், 'தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து போராடும் ஒரே தலைவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழ்நாடு பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்றும், பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகவும் பல கட்டுக்கதைகளைக் கூறி தவெக ஆட்சிக்கு வந்தது. தற்போது, தமிழ்நாட்டுப் பெண்கள் 42 சதவீதம் பேர் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள் என முதல்வர் விஜய் கூறியிருக்கிறார். இது திமுகவின் உழைப்பால் கிடைத்த பலன். தவெக நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட பெண்களை தரக்குறைவாக படம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி வன்முறையை கடந்து வந்தோம். அதை தாண்டிய ஒரு பாதுகாப்பு இல்லாத சூழலை தமிழகத்தில் பெண்கள் எதிர்நோக்கி உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் இந்த சூழலில், ஆட்சியில் இருப்பவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதற்கு முன்பு, திமுக தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய பிங்க் பேட்ரோலை பெயர் மாற்றி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்று கொண்டு வந்துள்ளனர். திமுக ஆட்சியைப் பார்த்து காப்பி அடிக்காத மாநிலமே இல்லை. தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை கொடுத்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தேர்தலால் ஆட்சி மாறி இருக்கலாம்; ஆனால் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வந்த இயக்கம் திமுக. 70 ஆண்டுகளாக பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் கதைகளை மக்களிடம் கொண்டு சேருங்கள்' என்றார்.

கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'எதிர்க்கட்சியாக இருக்கும் நாம் மீண்டும் ஆளுங்கட்சியாக மாற வேண்டும் என்றால், இன்னும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டும். அதற்கான களம்தான் இந்தக் கூட்டம். புதிய அரசைப் பற்றி, ஆறு மாதம் விமர்சனம் செய்யாமல் இருப்போம் என்று நான் சில நிகழ்ச்சிகளில் தெரிவித்தேன். அதை உண்மைக்கு மாறாக திரித்து, ஆட்சியை கவிழ்க்க சதியா? எனக்கேட்டு நம் எதிரிகள் அலறத் தொடங்கி விட்டனர். திமுக பொறுப்பான எதிர்க்கட்சியாக தனது கடமையை உறுதியாக செய்யும் என்று பல முறை சொல்லி விட்டேன். இந்த ஆட்சியின் தோல்விகளை நாம் தொடர்ந்து சுட்டிக் காட்டுவோம். கேள்வி கேட்போம். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.

தேர்தலுக்கு முன்பாக பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தோம். ஆனால் தற்பொழுது இந்த ஆட்சியில் தினந்தோறும் நடக்கும் குற்ற சம்பவங்கள், சென்னை மற்றும் பல ஊர்களை இருளில் மூழ்கடிக்கும் மின்வெட்டு பிரச்சனை, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி என நடந்த நாடகங்கள், இவை எல்லாம் ஏன் இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம் என மக்கள் கோபமாக வருந்தும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. தொலைக்காட்சிகளில் கொடூரமான குற்றச் சம்பவங்கள்தான் தற்பொழுது செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. திருவைகுண்டத்தில் ஆளுங்கட்சியை சார்ந்த நிர்வாகிகளே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து இரண்டு அமைச்சர்களிடம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை. முதல்வர் விஜய், அதிமுக எம்எல்ஏக்களை ஷாப்பிங் செய்து கொண்டு இருக்கிறார். அவருடைய ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா? பாஜகவின் ஜெராக்ஸ் போன்று விஜய் செயல்படுகிறார். அவருக்கு உதவி செய்வதாக நினைத்து ஆதரவளித்த கட்சிகள், தர்ம சங்கடத்தில் தவிக்கின்றன. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் அசிங்கமான ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. மேடைக்கு மேடை கான்பிடென்டாக இருங்கள் என்று முதல்வர், முதலில் அவர் கான்பிடென்டாக இருக்கிறாரா என்பதை தெரிவிக்க வேண்டும். தீர்ந்து போன சக்தி என்று கூறி, அந்த கட்சியின் உறுப்பினர்களை திருடிக் கொண்டிருக்கிறார் முதல்வர். பாலியல் வன்கொடுமைகள், அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு என தினமும் நடக்கும் குற்றங்களை பார்த்து யாராலும் விமர்சிக்காமல் இருக்க முடியுமா? பொதுமக்களின் பாதுகாப்பை பற்றி எப்படி பேசாமல் இருக்க முடியும்? டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் சிலவற்றை தனது உரையில் குறிப்பிட்டார்' என்றார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKTamil Nadu Politicsஅரசியல்திமுகவிஜய்ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தேசிய பாதுகாப்பு: அமெரிக்காவில் ஆந்த்ரோபிக் AI மாடல்களுக்கு தடை
Next Article 14-06-2026 ராசி பலன்: குடும்ப செயல்பாடுகள் கோபத்தை தூண்டலாம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு மற்றும் தே.மு.தி.க. எம்.பி. எல்.கே.சுதீஷ் சந்திப்பு

வேலூர் விமான நிலையம் 6 மாதங்களில் திறப்பு: மத்திய மந்திரி உறுதி

வேலூர் விமான நிலையம் அடுத்த 6 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய…

ஆகஸ்ட் 8, 2026

அமித் ஷாவின் பெயரை கேட்டால் பயங்கரவாதிகளே நடுங்குவர்: கிரண் ரிஜிஜூ

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, 'அமித் ஷாவின்…

ஆகஸ்ட் 8, 2026

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த வாலிபர்

சென்னையில், உயரமான மின்கம்பத்தில் ஏறி இளைஞர் ஒருவர்…

ஆகஸ்ட் 7, 2026

ஆன்லைன் மோசடி: 9 நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

ஆன்லைன் மோசடி: வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் கட்டணங்களைச் சேர்த்த…

ஆகஸ்ட் 7, 2026

விரைவுச்சாலையை உலர்த்த டேபிள் ஃபேன்: உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் லக்னோ-கான்பூர் விரைவுச்சாலை திறக்கப்பட்ட 2 வாரங்களில்…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கரூர் உயிரிழப்பு: 41 குடும்பங்களுக்கு அரசு வேலை – விஜய் வழங்குகிறார் பணி ஆணை

கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படவுள்ளது. முதல்வர் விஜய் ஜூலை 10ஆம் தேதி கரூர் சென்று பணி…

1 Min Read
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் கோஷமிடும் காட்சி
இந்தியா

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் தனித்து போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி தனியாக நின்று கோஷமிட்டனர். இது நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் நிலைப்பாட்டை மேலும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பெண்கள் பாதுகாப்புக்கு முதல்வர் விஜய் முக்கியத்துவம் – அமைச்சர் ராஜ்மோகன்

தமிழக பெண்களின் பாதுகாப்புக்கு முதல்வர் விஜயின் முழு கவனமும் இருக்கும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற நேரலை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

1 Min Read
வெள்ளை ஆடைகளை பராமரிக்கும் முறை
லைஃப் ஸ்டைல்

வெள்ளை ஆடைகளை புதுப்பொலிவுடன் வைத்திருக்க எளிய வழிகள்!

வெள்ளை ஆடைகள் மஞ்சள் நிறமாக மாறாமல், புதுப்பொலிவுடன் இருக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள். வெந்நீரில் ஆக்ஸிஜன் ப்ளீச் கலந்து ஊறவைத்து துவைத்தால் கறைகள் குறையும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?