ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ படத்திற்கு பிறகு, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46-வது படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். நாக வம்சி தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, நவின் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.
படக்குழு வெளியிட்டுள்ள இந்த புதிய போஸ்டர் தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் 46-வது படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
