MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஈரோடு டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 4-வது நாளாக நீடிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஈரோடு டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 4-வது நாளாக நீடிப்பு

தமிழ்நாடு

ஈரோடு டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 4-வது நாளாக நீடிப்பு

Admin
Last updated: மே 28, 2026 11:26 காலை
Admin
Share
SHARE

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது. மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 183 டாஸ்மாக் கடைகளில் 40 கடைகள் மூடப்பட்டு, தற்போது 143 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அனைத்து கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மது வாங்கிய அதே கடையில் காலி பாட்டில்களை கொடுத்தால், கூடுதலாக வாங்கிய ₹10-ஐ திரும்பத் தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் கூடுதல் வேலைப்பளுவை ஏற்படுத்துவதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 25-ஆம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, டாஸ்மாக் ஊழியர்கள் சூரியம்பாளையம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி காலி பாட்டில்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என அதிகாரிகள் கூறியதால், உடன்பாடு எட்டப்படவில்லை.

டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், '40 கடைகள் மூடப்பட்டதால் மற்ற கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் காலி பாட்டில்களை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்' என்றனர். மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுப்பிரியர்கள் மது வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், உயர்ரக பாருடன் கூடிய தனியார் மதுபானக் கடைகளை நோக்கி மதுப்பிரியர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள தனியார் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Erode Tasmac StrikeTamil Naduஈரோடுடாஸ்மாக்மதுப்பிரியர்கள்வேலைநிறுத்தம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி: ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை
Next Article ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: தற்காப்பு நடவடிக்கை என விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

அரசு மருத்துவர்கள் தனி தொழில் செய்ய தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அரசு மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவு அரசு மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தென்காசியில் அதிர வைத்த ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி!

தென்காசி மாவட்டத்தில் தென்மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதைக் கண்டு பொதுமக்கள், சிறுவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

1 Min Read
தமிழ்நாடு

விருதுநகரில் தனியார் பஸ் விபத்து: 2 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

விருதுநகரில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர். அமைச்சர் ஜெகதீஸ்வரி நேரில் ஆறுதல் கூறினார்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?