MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மெரினா நீலக்கொடி கடற்கரை: ஆணையாளர் ஆய்வு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மெரினா நீலக்கொடி கடற்கரை: ஆணையாளர் ஆய்வு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மெரினா நீலக்கொடி கடற்கரை: ஆணையாளர் ஆய்வு

தமிழ்நாடு

மெரினா நீலக்கொடி கடற்கரை: ஆணையாளர் ஆய்வு

Admin
Last updated: மே 27, 2026 7:14 மணி
Admin
Share
SHARE

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சர்வதேச தரத்திலான நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரைத் திட்டத்தின் கீழ், தலா 20 ஏக்கர் பரப்பளவில் மூங்கிலால் ஆன நிழற்குடைகள், சாய்வு நாற்காலிகள், அமரும் நாற்காலிகள், கண்காணிப்புக் கோபுரங்கள், குப்பைத் தொட்டிகள், முகப்பு வளைவு, தியான மையம், வாசிக்கும் அறை மற்றும் தன்படம் எடுக்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், தென்னை மரங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, காட்சிப் பதிவு கண்காணிப்பு, முதலுதவி அறை, இருப்பு அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான கழிப்பறை, தானியங்கி இயந்திரம் மூலம் தூய்மையான குடிநீர் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆய்வின்போது, ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் நலன் கருதி, குப்பைகள் சேகரிக்கும் பணியை நாள்தோறும் சுழற்சி முறையில் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் பயன்படுத்தும் இலவசக் கழிப்பிடங்களை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் நடைபாதைகளையும் தினந்தோறும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், விவேகானந்தர் இல்லம் எதிரில் முடிவுறும் நிலையில் உள்ள நீலக்கொடி கடற்கரை திட்டம்-3, கலங்கரை விளக்கம் பின்பகுதியில் நடைபெற்று வரும் நீலக்கொடி கடற்கரைத் திட்டம்-4, அண்ணா சதுக்கம் அருகில் தொடங்கப்பட்டுள்ள நீலக்கொடி கடற்கரைத் திட்டம்-5 ஆகிய பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

இதனிடையே, ஆணையாளர் சென்னை மெரினா நீச்சல் குளத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படுகிறது. கோடை காலம் என்பதால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் இங்கு வந்து பயன்பெற்று வருகின்றனர். நீச்சல் குளத்தின் தண்ணீர், குளம், கழிவறை, உடை மாற்றும் அறைகள் ஆகியவற்றை தினந்தோறும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என ஆணையாளர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் திரு.பானுகுமார் மற்றும் பிற அலுவலர்கள் உடனிருந்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChennaiMarina Beachசென்னைநீலக்கொடி கடற்கரைமாநகராட்சி ஆணையாளர்மெரினாஜி.எஸ்.சமீரன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய்: முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிப்பு
Next Article ஐபிஎல் 2026: குல்தீப் யாதவை விடுவிக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை: ராதிகா சரத்குமார் வேதனை

இயக்குநர் பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற வேண்டிய இடத்தில், சர்க்கஸ் போல மாறியது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் தனது ஆழ்ந்த…

1 Min Read
சென்னையில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மற்றும் பழைய பொருட்கள்
தமிழ்நாடு

சென்னையில் நேற்று 33.22 டன் குப்பைகள் அகற்றம்!

சென்னையில் நேற்று 33.22 டன் பழைய மற்றும் தேவையற்ற பொருட்கள் சேகரிக்கப்பட்டு, முறையாக அகற்றப்பட்டன. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி சென்னையை தூய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும்.

1 Min Read
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து நடந்த இடம்
தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 Min Read
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்
தமிழ்நாடு

பிரதமர் மோடி பிறந்தநாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய பாஜக

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் பிறந்த 18 பச்சிளம் குழந்தைகளுக்கு பாஜக சார்பில் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன. தமிழக பாஜக தலைவர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?