MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வித்தியாசமான வேடங்களுக்காக 2 வருடங்கள்கூட காத்திருக்க தயார் – ஜோதிகா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வித்தியாசமான வேடங்களுக்காக 2 வருடங்கள்கூட காத்திருக்க தயார் – ஜோதிகா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - வித்தியாசமான வேடங்களுக்காக 2 வருடங்கள்கூட காத்திருக்க தயார் – ஜோதிகா

சினிமா

வித்தியாசமான வேடங்களுக்காக 2 வருடங்கள்கூட காத்திருக்க தயார் – ஜோதிகா

Admin
Last updated: மே 26, 2026 10:42 மணி
Admin
Share
SHARE

சோனாக்சி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் நடிப்பில் அஸ்வினி திவாரி இயக்கியுள்ள 'சிஸ்டம்' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மே 22 அன்று வெளியானது. இந்தப் படத்தில் ஜோதிகா ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்த நீதிமன்ற சுருக்கெழுத்தாளராக நடித்துள்ளார். சோனாக்சி சின்ஹா வசதி படைத்த அரசு வழக்கறிஞராக நடித்துள்ளார். சமூக அந்தஸ்தில் முற்றிலும் வேறுபட்ட இந்த இரு பெண்களும், புதைக்கப்பட்ட அநீதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர எப்படி கைகோர்க்கிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு.

'ஜோதிகாவிடம் எப்போது மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிப்பீர்கள்' என்ற கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, 'நான் சரியான கதைகள் வருவதற்காக காத்திருக்கிறேன். அழுத்தமான வேடங்கள் உள்ள படங்கள் பல நடித்திருக்கிறேன். அரசுப் பள்ளி ஆசிரியை முதல் வழக்குரைஞர் வரை பெண் மைய பாத்திரங்கள் செய்யக்கூடிய எல்லா வேடங்களிலும் நடித்துவிட்டேன். குடும்பத் தலைவியாகவும் பல விதங்களில் நடித்துவிட்டேன். நான் இப்போது புதுமையான, வித்தியாசமான ஒன்றைத் தேடுகிறேன். அதற்காக 2 வருடங்கள்கூடக் காத்திருக்க நான் தயார்' என்று தெரிவித்தார்.

மம்முட்டியுடன் நடித்த மலையாளப் படத்தின் கதாபாத்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் குறிப்பிட்ட ஜோதிகா, அது அமைதியான அதேநேரத்தில் வலுவான பாத்திரமாக இருந்ததாகக் கூறினார். இதுபோன்று வித்தியாசமான வேடங்களை தான் தேடுவதாகவும், இல்லையெனில் அது பார்வையாளர்களுக்கும் சலிப்பைத் தரக்கூடியதாக இருந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார். 30 வருடங்களாக தன்னை பார்த்து வரும் பார்வையாளர்கள், ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப செய்வதை விரும்பவில்லை என்றும், வேறுவிதமான ரோல்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போதுள்ள பார்வையாளர்கள் பல மொழிப் படங்களையும் பார்ப்பதால், தனது நடிப்பிலும் அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக ஜோதிகா தெரிவித்தார். இதுபோன்ற வேடங்களைத் தேர்ந்தெடுப்பதில் சூர்யா மிகுந்த ஆதரவாக இருப்பதாகவும், ஆனால் தென்னிந்திய சினிமாவில் அப்படியான வேடங்களை யாரும் எழுதுவதில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். பெண்ணின் பல்வேறு பரிணாமங்களைப் பிரதிபலிக்கும் வேடங்களில் நடிக்க விருப்பம் என்றும், அது தமிழ்ப் படமாக இருந்தாலும் சரி, இந்தி அல்லது குஜராத்தி படமாக இருந்தாலும் சரி, அந்த வேடம் பிடித்தால் நடிப்பேன் என்றும் அவர் கூறினார். ஒரே விஷயத்தை மீண்டும் செய்யவோ, ஒரே முகபாவங்களை மட்டுமே நடிக்க விருப்பமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சிஸ்டம்தமிழ் சினிமாதிரில்லர் படம்நடிகைஜோதிகா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை: திருப்பூர் அதிர்ச்சி
Next Article ஐபிஎல் 2026: ரஜத்தின் அதிரடி சதம்! ஆர்சிபி மெகா ஸ்கோர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் காவிரி விவகாரம் குறித்து பேட்டி அளிக்கிறார்

விவசாயிகளின் நலனே முக்கியம் – டி.கே.சிவகுமார்

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை கர்நாடகத்தின் முக்கியப் பிரச்சினையாகத் தொடர்கிறது. அரசியலை விட…

ஆகஸ்ட் 2, 2026

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்

பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்வதில்…

ஆகஸ்ட் 2, 2026

கேரளாவில் கனமழை: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

கேரளாவில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர்,…

ஆகஸ்ட் 2, 2026

காவிரி நீர் பங்கீடு: கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடக்கம்

காவிரி நீர் பங்கீடு தொடர்பான முக்கிய விவகாரத்தில்,…

ஆகஸ்ட் 2, 2026

பெண்ணிடம் ரூ.3 கோடி மோசடி: 3 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் பெண்ணிடம் ரூ.3 கோடி மோசடி செய்த…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

சினிமா

திரைத்துறையின் பொருளாதார சவால்கள்: கமல் அழைப்பு!

உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் போர் சூழல் இந்தியத் திரைத்துறையை பாதிக்கும் என நடிகர் கமல்ஹாசன் எச்சரித்துள்ளார். செலவுகளை முறைப்படுத்தவும், கூட்டாக சவால்களை எதிர்கொள்ளவும் திரைத்துறையினருக்கு அவர்…

1 Min Read
சினிமா

சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்திற்கான புரோமோ வீடியோ வெளியீடு

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 'லவ் பைட்' திரைப்படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 Min Read
சினிமா

தி பாரடைஸ்: வதந்திகளுக்கு படக்குழுவின் நேரடி விளக்கம்!

நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'தி பாரடைஸ்' திரைப்படம் குறித்த வதந்திகளுக்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட உள்ளதாக…

2 Min Read
‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
சினிமா

‘மொத ராத்திரி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?