MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பால்குடம், அக்னிசட்டி நேர்த்திக்கடன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பால்குடம், அக்னிசட்டி நேர்த்திக்கடன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆன்மிகம் - சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பால்குடம், அக்னிசட்டி நேர்த்திக்கடன்

ஆன்மிகம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பால்குடம், அக்னிசட்டி நேர்த்திக்கடன்

Admin
Last updated: மே 26, 2026 5:25 மணி
Admin
Share
SHARE

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா, கடந்த மே 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை முதல் நடைபெற்றது.

சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி ஏந்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். குறிப்பாக, குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்த பக்தர்கள், பிறந்த குழந்தையை கரும்புத் தொட்டிலில் கட்டி, நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் நான்கு ரத வீதிகளில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

திருவிழாவை முன்னிட்டு, சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும் நீர்-மோர் பந்தல்களை அமைத்து, பொதுமக்களுக்கு குளுமையான நீர் மற்றும் மோர் வழங்கி வருகின்றனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

நாளை, மந்தை களத்தில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருக்கும் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். வரும் ஜூன் 2ஆம் தேதி தேரோட்டமும், 3ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறும். கோயில் செயல் அலுவலர் ராஜா தலைமையில் பணியாளர்கள், அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் சிறப்பு பூஜைகள் என திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Maduraiஅக்னிசட்டிசோழவந்தான்பால்குடம்மாரியம்மன் கோவில்வைகாசி திருவிழா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குதிரை பேரம் நடத்தவில்லை – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
Next Article கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண் – ஆ.ராசா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு குறித்த செய்தியை தெரிவிக்கும் காட்சி

ஆந்திராவில் கொரோனா: 4 பேர் உயிரிழப்பு, 12 பேருக்கு சிகிச்சை

ஆந்திராவில் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் சிகிச்சை பெற்று…

ஜூலை 18, 2026

52 வயதில் செயற்கை கருத்தரிப்பு: குழந்தை பெற்ற பெண் – மருத்துவமனைக்கு உத்தரவு

52 வயதான பெண் செயற்கை கருத்தரிப்பு மூலம்…

ஜூலை 17, 2026

எரிபொருள் நெருக்கடியிலும் இந்திய வளர்ச்சி தடைபடவில்லை: பிரதமர் மோடி

மேற்கு ஆசியப் போர் மற்றும் எரிபொருள் விநியோக…

ஜூலை 17, 2026

பணியிடப் பாதுகாப்பு: பெண்களின் பணித்திறனுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

பெண்களின் பணித்திறனை அதிகரிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய…

ஜூலை 17, 2026

இஸ்லாமிய வீட்டுப்பாடம்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இந்து மாணவருக்கு இஸ்லாமிய வீட்டுப்பாடம் கொடுத்ததாக…

ஜூலை 17, 2026

You Might Also Like

757 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அழைப்பு
ஆன்மிகம்

757 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அழைப்பு

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 757 திருக்கோயில்களில் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனத்துக்கு விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1 Min Read
திருப்பதி ஏழுமலையான் கோவில்
ஆன்மிகம்

திருப்பதி இலவச தரிசன டோக்கன் ரத்து: பக்தர்கள் சிரமம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2 Min Read
ஆன்மிகம்

சீர்காழியில் வைகாசி மாத சிறப்பு கோபூஜை: பக்தர்கள் பரவசம்!

சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோவிலில் வைகாசி மாத பிறப்பையொட்டி நடைபெற்ற கோபூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பசுக்களுக்கு வழிபாடு செய்தனர்.

1 Min Read
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு
ஆன்மிகம்

சேலம் கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழா: முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 22 நாட்கள் நடைபெறும் ஆடிப்பெருவிழா இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்வுடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?