MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > உலகம் > ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்
உலகம்

ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்

Admin
Last updated: May 26, 2026 10:12 am
Admin
Share
SHARE

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா இன்று அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் பண்டர் அபாஸ் நகரில் உள்ள ஏவுகணை ஏவுதளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஹர்முஸ் ஜலசந்தி பகுதியிலும் ஈரான் கடற்படைக்கு சொந்தமான படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தொடர் தாக்குதல்களால் பலர் உயிரிழந்தனர். மேலும், ஹர்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியதால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா ஏப்ரல் 7ம் தேதி அறிவித்தது. இதற்கிடையே, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. ஈரான் அணு ஆயுத தயாரிப்பு முயற்சியைக் கைவிட வேண்டும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கோரியது. அதேபோல், ஈரான் துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், தாக்குதலை நிறுத்த வேண்டும், ஹர்முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதை அங்கீகரிக்க வேண்டும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெற வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்தது.

தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா இன்று நடத்தியுள்ள இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்காப்பு நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டாலும், இதில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. அமெரிக்காவின் இந்த திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் நிலவுகிறது. ஈரான் இதற்கு பதிலடி கொடுக்குமா அல்லது பேச்சுவார்த்தையில் விரிசல் ஏற்பட்டு போர் மீண்டும் தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:US attack Iranஅமெரிக்காஈரான்தாக்குதல்போர் பதற்றம்மத்திய கிழக்கு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article செய்யாத பணிக்கு ரூ.16 லட்சம்: காரைக்குடி மாநகராட்சி மீது ஒப்பந்ததாரர் புகார்
Next Article பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

உலகம்

61 பெண்களிடம் பாலியல் சீண்டல்: இந்திய வம்சாவளி மசாஜ் தெரபிஸ்டுக்கு 13 ஆண்டு சிறை!

ஆஸ்திரேலியாவில் 61 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளி மசாஜ் தெரபிஸ்டுக்கு 13 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
உலகம்

தைவான் விவகாரம்: சீனா எச்சரிக்கை! டிரம்ப் பதில் என்ன?

தைவான் விவகாரத்தில் சீனா விடுத்த எச்சரிக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், 'ஆயுத விற்பனை குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை' என பதிலளித்துள்ளார். இது இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.

1 Min Read
உலகம்

சரக்கு ரெயிலில் 6 சடலங்கள் கண்டெடுப்பு.. அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவில் சரக்கு ரெயில் ஒன்றில் 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா - மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள டெக்சாஸ் மாநிலத்தின் லாரெடோ…

1 Min Read
உலகம்

இந்திய புவித்தட்டு பிளவு: நிலநடுக்க அபாயம் அதிகரிப்பு!

இந்திய புவித்தட்டு ஒரே பாறையாக நகர்வதில்லை, அது பிளவுபடுகிறது என புதிய ஆய்வு கண்டுபிடித்துள்ளது. இதனால் நிலநடுக்க அபாயம் அதிகரித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?