MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 உயர்வு – ராகுல் விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 உயர்வு – ராகுல் விமர்சனம்
இந்தியா

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 உயர்வு – ராகுல் விமர்சனம்

Admin
Last updated: May 26, 2026 8:56 am
Admin
Share
SHARE

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2.50 உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த 2 வாரங்களில் நான்காவது முறையாகும். மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை 50% அதிகரித்ததால், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டது. இதை ஈடுசெய்ய, கடந்த 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, மே 19-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் தலா 90 பைசா அதிகரித்தது. மேலும், மே 23-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 87 பைசாவும், டீசல் 91 பைசாவும் விலை உயர்ந்தது.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தின. இந்த நான்காவது விலை உயர்வால், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 அதிகரித்து ரூ.107.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 அதிகரித்து ரூ.99.55 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சென்னையில் எரிபொருள் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து புதிய உச்சங்களை பதிவு செய்து வருகின்றன.

மும்பையில் நடைபெற்ற சிட்பி-யின் 37வது ஆண்டு விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி வெறும் ராஜதந்திர அல்லது புவிசார் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல, அது சாதாரண மக்களின் எரிபொருள் செலவுகளையும் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும், உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தவில்லை. மாறாக, இதன் மீதான கலால் வரிகள் குறைக்கப்பட்டன. இதன் மூலம் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'பணவீக்க மனிதர் மோடி மீண்டும் தாக்கியுள்ளார். உங்கள் பாக்கெட்டில் இருந்து அமைதியாக பணம் பறிப்பதற்காக, அவர்கள் பெட்ரோல்-டீசல் விலையை தவணை முறையில் உயர்த்துகிறார்கள்' என்று விமர்சித்துள்ளார். இதற்கிடையில், கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:டீசல்பெட்ரோல்மோடிராகுல் காந்திவிலை உயர்வுவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேகதாது அணை: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திருமாவளவன் வலியுறுத்தல்
Next Article பக்ரீத் விடுமுறை: சென்னையில் இருந்து 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் மதுவிலக்கு: வருவாய் இழப்பால் ஃபரூக் அப்துல்லா எதிர்ப்பு

ஜம்மு காஷ்மீரில் மதுவிலக்கு விதிக்கப்பட்டால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பிற்கு மத்திய அரசு ஈடுசெய்ய ஒப்புக்கொண்டால், இரண்டு நிமிடங்களில் அதை அமல்படுத்தலாம் என தேசிய மாநாட்டுக் கட்சித்…

1 Min Read
இந்தியா

மணிப்பூரில் சிக்கிய 132 என்சிசி மாணவர்கள் பத்திரமாக மீட்பு

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் பயிற்சி முடித்த 132 என்சிசி மாணவர்கள், அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக சாலை மார்க்கமாக செல்ல முடியாத நிலையில், இந்திய விமானப்படை…

1 Min Read
தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: முதல்வர் விஜய் கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹3 உயர்வால் மக்கள் பாதிப்படைவார்கள் என முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல்.

1 Min Read
இந்தியா

பிரதமர் மோடி 6 நாள் வெளிநாட்டுப் பயணம்: ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார்!

பிரதமர் மோடி 6 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார். எரிசக்தி பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?