MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகேதாட்டு அணை: முதல்வர் விஜய் பேசுவாரா? – கே.என்.நேரு கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகேதாட்டு அணை: முதல்வர் விஜய் பேசுவாரா? – கே.என்.நேரு கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - மேகேதாட்டு அணை: முதல்வர் விஜய் பேசுவாரா? – கே.என்.நேரு கேள்வி

அரசியல்

மேகேதாட்டு அணை: முதல்வர் விஜய் பேசுவாரா? – கே.என்.நேரு கேள்வி

Admin
Last updated: மே 24, 2026 5:26 மணி
Admin
Share
SHARE

மேகேதாட்டுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இதற்காகவாவது தமிழக முதல்வர் விஜய் வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்று டி.கே.சிவகுமார் சொல்லி இருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் சிவக்குமார் இப்படி பேசி இருப்பது போலத் தெரிகிறது. தங்களது காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்து, துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளார் அவர்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'மேகேதாட்டுவில் அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக சிவக்குமார் சொல்லி இருக்கிறார். காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட திமுக தலைவர் ஸ்டாலின் எந்தவிதத் தியாகம் செய்யவும் தயங்க மாட்டார். மேகதாது அணையை கர்நாடகம் கட்டுவது என்பது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி தற்பொழுது மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தினை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.' என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

'காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதல்வரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகி விடக்கூடாது. காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கிறது, ஒரே உணர்வில் இயங்குகிறது என்பதை, முதல்வர் விஜய் தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் அவர்களது முயற்சியை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும். இப்போதாவது – இதற்காகவாவது தமிழக முதல்வர் வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கிறார்கள்' என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்கர்நாடகாகாவிரிகே.என்.நேருமுதல்வர் விஜய்மேகேதாட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீட் தேர்வு ரத்து விரக்தியில் மாணவி தற்கொலை: கலபுராகியில் சோகம்
Next Article ஐபிஎல் 2026: வைபவ் சூர்யவன்ஷி டி20 வரலாற்றில் புதிய சாதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விரைவில் அனைவரும் பேசுவோம் – அண்ணாமலை அறிவிப்பு

தமிழக பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை 'இது நம்ம இயக்கம்' என்ற புதிய அமைப்பை தொடங்கி, 2029 தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். தற்போது 18.54 லட்சம்…

1 Min Read
அரசியல்

விசிகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு: காரணம் என்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு அறிவித்துள்ளார். கட்சியின் தலைவர் திருமாவளவனின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தடுமாற்றமான பேச்சுகளே இதற்குக் காரணம்…

2 Min Read
சினிமா

விஜய் ஆட்சி: சினிமா பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமா? – பேரரசு நம்பிக்கை

இயக்குநர் பேரரசு, நடிகர் விஜய்யின் அரசு தமிழ் சினிமாவின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் என்றும், மாநில விருதுகளை சரியான நேரத்தில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜய்க்கு பாராட்டு: வைகோ எக்ஸ் தளத்தில் தகவல்

தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜயின் நேர்மையான நிர்வாகத்தைப் பாராட்டியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தனது நூல் வெளியீட்டு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?