MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீதிமன்ற அவமதிப்பு: போலீஸ் கமிஷனருக்கு 2 வார சிறை – அதிரடி உத்தரவு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீதிமன்ற அவமதிப்பு: போலீஸ் கமிஷனருக்கு 2 வார சிறை – அதிரடி உத்தரவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நீதிமன்ற அவமதிப்பு: போலீஸ் கமிஷனருக்கு 2 வார சிறை – அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு

நீதிமன்ற அவமதிப்பு: போலீஸ் கமிஷனருக்கு 2 வார சிறை – அதிரடி உத்தரவு!

Fernandez
Last updated: நவம்பர் 28, 2026 2:24 மணி
Fernandez
Share
தெலங்கானா காவல் ஆணையர் மற்றும் துணை காவல் ஆணையருக்கு சிறை தண்டனை விதித்த உத்தரவு
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் சிறை தண்டனை பெற்ற சைபராபாத் காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்
SHARE

தெலங்கானா மாநிலத்தில், நிலம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத சைபராபாத் காவல் ஆணையர் ரமேஷ் மற்றும் துணை காவல் ஆணையர் என்.கோட்டி ரெட்டி ஆகியோருக்கு இரண்டு வார கால சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சி.வி.பாஸ்கர் ரெட்டி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேட்ச்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ள ஜீடிமேட்லா பகுதியில் 6.15 ஹெக்டேர் நிலம் தொடர்பாக இரு தரப்பினரிடையே நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வந்தது. இது தொடர்பாக சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அடுத்தக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, சம்பந்தப்பட்ட நிலப்பகுதியில் எந்தவித அத்துமீறலும் இன்றி பாதுகாக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை காவல்துறை செயல்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வழக்கில் சம்பந்தப்பட்ட பிரவீன் என்பவர், தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.பாஸ்கர் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, 'சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதால், உயர் நீதிமன்ற உத்தரவை காவல்துறை செயல்படுத்தவில்லை என்ற காரணத்தை ஏற்க முடியாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இருக்கும்போது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம், விசாரணை என்ற பெயரில் ஒரு சிவில் விவகாரத்தில் காவல்துறையின் தலையீட்டையோ அல்லது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான நடவடிக்கைகளையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது' என்று குறிப்பிட்டார்.

மேலும், காவல்துறை சமர்ப்பித்த அறிக்கை மூலம், சைபராபாத் காவல் ஆணையர் மற்றும் துணை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்ற உத்தரவின் முழு விவரமும் தெரிந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிவதாகவும் நீதிபதி தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை அவமதித்துவிட்டு வெறும் மன்னிப்பு கேட்பதன் மூலம் பின்விளைவுகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற நிலை இருக்கக் கூடாது என்றும், இதுபோன்ற மன்னிப்பை ஏற்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி நீதிபதி குறிப்பிட்டார்.

இதனையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருந்த குற்றத்திற்காக சைபராபாத் காவல் ஆணையர் ரமேஷ், துணைக் காவல் ஆணையர் என்.கோட்டி ரெட்டி ஆகியோருக்கு இரண்டு வார கால சிறைத் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அபராதத்தை செலுத்த தவறினால், கூடுதல் ஒரு வாரம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த தடையும் விதிக்கப்படாத பட்சத்தில், இருவரும் உயர் நீதிமன்ற பதிவாளர் முன்பு சரண் அடைய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Court ContemptJail SentencePolice CommissionerTelanganaகாவல் ஆணையர்சிறை தண்டனைசைபராபாத்தெலங்கானாநீதிமன்ற அவமதிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் நீதிமன்ற காவலில் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மக்களவையில் பாஜக கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது

பாஜக கூட்டணிக்கு மக்களவையில் கூடுதல் பலம்: 20 எம்.பி.க்கள் ஆதரவு

மக்களவையில் பாஜக கூட்டணிக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் ஆதரவு…

நவம்பர் 28, 2026

மக்களவைத் தொகுதிகள்: 50% அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை, அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளை…

நவம்பர் 28, 2026

சிஜேபி சவுரவ் தாஸுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்: மத்திய அரசு தகவல்

சிஜேபி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸுக்கு…

நவம்பர் 27, 2026

உ.பி.யில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.5,000 உதவித்தொகை: சமாஜ்வாதி வாக்குறுதி

உத்தரப் பிரதேசத்தில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5,000…

நவம்பர் 27, 2026

மும்பை பயங்கரவாத தாக்குதல்: 18 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் 166 அப்பாவி மக்கள்…

நவம்பர் 26, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு: யாருக்கு என்ன துறை?

தமிழக முதலமைச்சர் விஜயுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், தற்போது ஆளுநர் மாளிகை அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. யாருக்கு எந்தத் துறை என்ற விவரம் இதோ!

1 Min Read
சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்
தமிழ்நாடு

சங்கரநாராயண சுவாமி கோவில்: ஆடித்தபசு விழா கோலாகலம்

கன்னியாகுமரி சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 26-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

1 Min Read
விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஓய்வூதியம் மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்
தமிழ்நாடு

13 முன்னாள் வீரர்களுக்கு ஓய்வூதியம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்

விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 13 முன்னாள் வீரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 82 வீரர்கள், 13 குடும்ப…

2 Min Read
சட்டப்பேரவையில் பேசும் முதல்வர் விஜய்
தமிழ்நாடு

சர்க்காரியா முதல் ED வரை: ஆதாரங்களுடன் முதல்வர் விஜய் பேச்சு!

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், சர்க்காரியா கமிஷன் அறிக்கை மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களை சுட்டிக்காட்டி திமுகவினரின் ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் பேசினார். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மீதும் குற்றச்சாட்டுகள்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?