மத்திய அரசின் 'பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' (PMMVY) திட்டத்தின் கீழ், தகுதியான கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் குழந்தைக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இரண்டாவது குழந்தை ஒரு பெண் குழந்தையாக இருந்தால், கூடுதலாக ரூ.6,000 வழங்கப்படும். இந்தத் தொகை பயனாளிகளின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், 'பிரதமரின் தாய்மை போற்றுவோம் திட்டம்' என்றழைக்கப்படும் PMMVY, கருவுற்ற பெண்களுக்கு நிதி உதவி அளிப்பதோடு, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைத் தடுக்கும் நோக்கிலும் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் ரூ.6,000 என மொத்தம் ரூ.11,000 வரை மத்திய அரசு வழங்குகிறது.
இந்த திட்டம் முதலில் 2010-ல் 'இந்திரா காந்தி மாத்ரித்வா சஹ்யோக் யோஜனா' (IGMSY) என்ற பெயரில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் தொடங்கப்பட்டது. பின்னர், சில மாற்றங்களுடன் 'பிரதமரின் தாய்மை போற்றுவோம் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 2017 முதல் பிரதமர் மோடி அவர்களால் PMMVY என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு 100% மத்திய அரசே நிதியளிக்கிறது.
கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள், கர்ப்ப காலத்தில் வேலைக்குச் செல்ல முடியாமல் பொருளாதார ரீதியாகவும், சத்தான உணவு உட்கொள்ள முடியாமலும் சிரமப்படுகின்றனர். இத்தகைய பெண்களை மனதில் கொண்டு, மத்திய அரசு இந்த மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவுற்ற பெண்கள் நிதியுதவி பெற முடியும். இந்தப் பணம் பயனாளியின் வங்கி அல்லது அஞ்சல் கணக்கில் மூன்று தவணைகளாக ரூ.5,000 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
சில குடும்பங்களில் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறந்துவிடுமோ என்ற அச்சத்தில், இரண்டாவது குழந்தையைப் பெறுவதைத் தவிர்க்கின்றனர். இதனைத் தடுக்கும் வகையிலும், பெண் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் நோக்கிலும், இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் முதல் குழந்தைக்கு (ஆண்/பெண்) ரூ.5,000 மற்றும் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் ரூ.6,000 என மொத்தம் ரூ.11,000 வரை வழங்கப்படுகிறது.
ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம். மேலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்பதற்கான பிபிஎல் ரேஷன் கார்டு அல்லது ஆயுஷ்மான் பாரத் யோஜனா கார்டு வைத்திருப்பவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பலன் பெற, பெண்கள் MCP அட்டை (Last Menstrual Period), பயனாளியின் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்று, வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், மொபைல் நம்பர், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம். ஆஃப்லைனில் அங்கன்வாடி மையத்திலோ அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையத்திலோ பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க https://pmmvy.wcd.gov.in/ என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தலாம்.
