நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘அக்கா’ என்ற திரில்லர் வெப் தொடர், வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், தர்மராஜ் ஷெட்டி இயக்கியுள்ள இந்த வெப் தொடர், 1980-களில் 'பெர்னூர்' என்ற கற்பனை நகரத்தில் பெண் அதிகார வர்க்கத்தின் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒய்ஆர்எப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் தொடர், அதிகாரத்தை மையப்படுத்தி திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இந்தத் தொடரை எழுதி இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா இதன் தயாரிப்பாளர் ஆவார்.
இந்தத் தொடரில் தன்வி ஆஸ்மி, அன்ஷுமான் புஷ்கர் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் குறித்த அறிவிப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. மேலும், இதன் முதல் தோற்றப் போஸ்டர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.
1980-களில் தென்னிந்தியாவில் உள்ள பெர்னூர் என்ற கற்பனையான நகரத்தை மையமாகக் கொண்டு இத்தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பெண்கள் குழுவைச் சுற்றி கதை நகர்கிறது. அவர்களின் அதிகாரத்துக்கு வெளியிலிருந்து வரும் ஒருவரால் அச்சுறுத்தல் ஏற்படுவதும், அதனால் உருவாகும் மோதல்களும் திரில்லர் பாணியில் சொல்லப்படுகின்றன.
நீண்டகாலமாகத் தயாரிப்பில் இருந்து வந்த ‘அக்கா’ வெப் தொடர், வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்தத் தொடரின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், ‘அக்கா’ வெப் தொடரின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த வெப் தொடர் அக்டோபர் 30 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
