MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரூ.10 கோடி லஞ்சம்: ‘தூய சக்தி’யின் லட்சணமா? – கனிமொழி தாக்கு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரூ.10 கோடி லஞ்சம்: ‘தூய சக்தி’யின் லட்சணமா? – கனிமொழி தாக்கு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ரூ.10 கோடி லஞ்சம்: ‘தூய சக்தி’யின் லட்சணமா? – கனிமொழி தாக்கு

தமிழ்நாடு

ரூ.10 கோடி லஞ்சம்: ‘தூய சக்தி’யின் லட்சணமா? – கனிமொழி தாக்கு

Fernandez
Last updated: செப்டம்பர் 28, 2026 7:13 மணி
Fernandez
Share
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.
SHARE

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஆளும் தமாகா கட்சியையும், அதன் தலைவரும் முதல்வருமான விஜய் அவர்களையும் கடுமையாக விமர்சித்தார்.

"தாராபுரம் இடைத்தேர்தல் நடைபெறுவதற்குக் காரணமே தமாகாவின் குதிரைப்பேரம் தான். முதலமைச்சர் விஜய், அதிமுகவை 'தீர்ந்துபோன சக்தி' என்று மேடைக்கு மேடை பேசிவிட்டு, தற்போது அதே அதிமுகவில் இருந்தவர்களையே தனது கட்சியில் சேர்த்து வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார். இதுதான் வேட்பாளர்களைத் திருடும் தமாகாவின் லட்சணம்," என்று கனிமொழி குற்றம் சாட்டினார்.

மேலும், அதிமுகவில் வெற்றி பெற்று, மக்களுக்கு நன்றி சொல்லக்கூட நேரமின்றி ராஜினாமா செய்த சத்தியபாமா, தற்போது மீண்டும் தமாகா சார்பில் போட்டியிடுவதைச் சுட்டிக்காட்டி, "அன்று தீர்ந்துபோன சக்தி இன்று மட்டும் எப்படி 'தூய சக்தி'யாக மாறினார்? தமாகா என்பது திருட்டு சக்தி, ஊழல் சக்தி!" என அவர் கடுமையாக விமர்சித்தார்.

முதல்வர் விஜய் தனது பேச்சு ஸ்கிரிப்டை மாற்ற வேண்டும் அல்லது ஸ்கிரிப்ட் எழுதுபவரையாவது மாற்ற வேண்டும் என்றும் கனிமொழி அறிவுறுத்தினார். "காலையில் எழுந்ததில் இருந்து திமுக.. திமுக.. திமுக… எனத் தினமும் 32 முறை திமுகவைப் பற்றிப் பேசி வாக்குக் கேட்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 580 குற்றங்கள் நடந்துள்ளன. இதில் 200 கொலைகள், 300 பாலியல் குற்றங்கள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் எனப் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இதுதான் நீங்கள் கொண்டு வந்த மாற்றமா?" என்று கேள்வி எழுப்பினார்.

"மக்கள் மனதில் திமுக இருப்பதால், அதையே விஜய் வாக்குக் கேட்கிறார். தாராபுரம் தேர்தலிலும் அவர் வந்து திமுக, திமுக, திமுக என்றுதான் சொல்வார். எனவே, மக்களுக்காகப் போராடும் திமுகவிற்கு வாக்களியுங்கள்!" என கனிமொழி கேட்டுக்கொண்டார்.

'தூய சக்தி' என்று சொல்லிக்கொள்ளும் தமாகா அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் புகார்கள் இருப்பதாகவும் கனிமொழி சுட்டிக்காட்டினார். "அமைச்சர் ஆனந்த் மீது சொந்தக் கட்சி நிர்வாகியே ஊழல் புகார் கொடுத்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்கள். இதுதான் 'தூய சக்தி'யின் லட்சணமா? சாயப்பட்டறை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.10 கோடிக்கு மேல் லஞ்சம் வாங்கிய புகார் குறித்தும், செல்போனில் குழந்தைக்கு மாத்திரை கொடுத்ததாகப் பொய் சொன்ன அமைச்சர் குறித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என்றார்.

முதல்வர் விஜய் மீது ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஐடி ரெய்டு வழக்கு இருப்பதாகவும், எனவே தமாகா 'தூய சக்தி' என்று சொல்லிக்கொள்ள அருகதை இல்லை என்றும் கனிமொழி கூறினார். அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்தால், அவர் எப்போது கட்சி தாவுவார் என்று தெரியாது என்றும், ஆனால் திமுகவில் இருந்து யாரையும் விலைக்கு வாங்க முடியாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இடைத்தேர்தல் நடக்கும் பகுதிகளில் மட்டும் மின்வெட்டு குறைந்திருப்பதாகவும், மற்ற பகுதிகளில் மின்வெட்டு தீவிரமாக இருப்பதாகவும், இதைக் கேட்டால் பீஸ் வாங்கிவிட்டுப் போகிறார்கள் என்றும் கனிமொழி விமர்சித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKKanimozhiThamakhaகனிமொழிதமகாதாராபுரம் இடைத்தேர்தல்திமுகவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஏரல் இடையர்காடு முத்தாரம்மன் கோவில் கொடைவிழா ஏரல் இடையர்காடு முத்தாரம்மன் கோவில்: கொடைவிழா கோலாகலம்
Next Article கத்தியுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் லாட்டரி பரிசு கிடைக்காத விரக்தியில் பெண் வியாபாரி மீது இளைஞர் தாக்குதல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

கிருஷ்ணகிரி மேம்பால விபத்து நடந்த இடம்
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மேம்பால விபத்து: லாரி மோதி கார் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலி

கிருஷ்ணகிரி அருகே மேம்பாலப் பகுதியில் லாரி மோதி கார் கவிழ்ந்த விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 Min Read
தமிழக ஆளுநரிடம் புகார் அளிக்கும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

ஆளுநரிடம் பாஜக புகார்: ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி பங்கேற்பு குறித்து…

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தனிநபர்கள் பங்கேற்றது குறித்து ஆளுநரிடம் பாஜக புகார். சட்டம்-ஒழுங்கு குறித்தும் முதலமைச்சருக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த கோரிக்கை.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

சீமான் ராஜினாமா செய்ய சவால்: மாணிக்கம் தாகூர் அதிரடி

திமுக தயவில் எம்.பி. ஆன சீமான் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுவது சரியல்ல. காங்கிரஸ் ஓட்டு பெற்று வெற்றி பெற்ற உதயநிதியை ராஜினாமா செய்ய சொல்லட்டும்,…

1 Min Read
தங்கம் விலை குறைவு குறித்த செய்தி அறிவிப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது: நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி அளித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?