MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிசிசிஐ-க்கு RTI பொருந்தாது: மத்திய தகவல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > பிசிசிஐ-க்கு RTI பொருந்தாது: மத்திய தகவல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
இந்தியா

பிசிசிஐ-க்கு RTI பொருந்தாது: மத்திய தகவல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

Admin
Last updated: May 18, 2026 5:28 pm
Admin
Share
SHARE

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, உலகின் மிகப்பெரிய பணக்கார கிரிக்கெட் அமைப்பாக திகழ்கிறது. ஐபிஎல் போன்ற பல லாபகரமான போட்டிகளை நடத்தி வரும் இதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து நீண்ட காலமாகவே கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிசிசிஐ-யின் செயல்பாடுகளை இனி வெளிப்படையாக அறிய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய தகவல் ஆணையம் (CIC) ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, பிசிசிஐ ஒரு அரசு அமைப்பு அல்ல என்றும், தகவல் அறியும் உரிமை சட்டமான RTI-யின் கீழ் அது வராது என்றும் மத்திய தகவல் ஆணையர் பி.ஆர். ரமேஷ் அறிவித்துள்ளார். பிசிசிஐ, இந்திய அரசியலமைப்பாலோ அல்லது நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டத்தாலோ உருவாக்கப்படவில்லை என்பதால், அதை அரசு அமைப்பாக கருத முடியாது என இந்த உத்தரவில் விளக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் அப்போதைய தகவல் ஆணையர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு, பிசிசிஐ-யை ஒரு பொது நிறுவனமாக அறிவித்து, RTI கீழ் அதன் செயல்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து பிசிசிஐ முதலில் உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தது. இது குறித்து விரிவாக ஆய்வு செய்து முடிவெடுக்கும்படி உச்சநீதிமன்றம் மத்திய தகவல் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த முக்கிய முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 முதல் 2024 வரை பிசிசிஐ தலைவராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயல்பட்டு வந்தார். அவருக்கு பிறகு, முன்னாள் கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் தற்போது பிசிசிஐ தலைவராக பொறுப்பு வகிக்கிறார். மேலும், ஜெய் ஷா தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:CICCricket BoardRTI சட்டம்பிசிசிஐமத்திய தகவல் ஆணையம்வெளிப்படைத்தன்மை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!
Next Article கேரளாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: முதல்வர் அறிவிப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

இந்தியா

வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி இல்லை: பிரதமர் மோடி திட்டவட்டம்

வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி விதிக்க உள்ளதாக வெளியான ஊடக செய்தியை பிரதமர் மோடி மறுத்துள்ளார். இது முற்றிலும் பொய்யானது என்றும், இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை என்றும்…

1 Min Read
இந்தியா

அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?

அசாம் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களாக, மனைவி உயிருடன் இருக்கும்போது மறுமணம் அல்லது லிவ்-இன் உறவு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.…

1 Min Read
இந்தியா

அமெரிக்காவில் ஹைதராபாத் பெண் இன்ஜினியர் மர்ம மரணம்: நீச்சல் குளத்தில் சடலமாக மீட்பு

அமெரிக்காவில் தனது தோழியின் திருமணத்திற்கு சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் ஸ்ரீவீணா (28) நீச்சல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், நன்றாக நீச்சல் தெரிந்த அவருக்கு…

1 Min Read
இந்தியா

மோடி பிரதமரான பிறகு 9 மாநிலங்களில் முதல்முறையாக பா.ஜனதா ஆட்சி

மோடி பிரதமரான பிறகு. 9 மாநிலங்களில் பா.ஜனதா முதல் முறையாக ஆட்சி அமைந்துள்ளது. மோடி பிரதமரான 2014-ம் ஆண்டு, அரியானா, மராட்டிய மாநிலங்களில் பா.ஜனதாவின் வெற்றிப்பயணம் தொடங்கியது.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?