MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பணபலம், அதிகார பலம் குழந்தைகளின் கதறலை மழுங்கடிக்குமா? வேல்முருகன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பணபலம், அதிகார பலம் குழந்தைகளின் கதறலை மழுங்கடிக்குமா? வேல்முருகன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பணபலம், அதிகார பலம் குழந்தைகளின் கதறலை மழுங்கடிக்குமா? வேல்முருகன் கேள்வி

தமிழ்நாடு

பணபலம், அதிகார பலம் குழந்தைகளின் கதறலை மழுங்கடிக்குமா? வேல்முருகன் கேள்வி

Fernandez
Last updated: செப்டம்பர் 25, 2026 6:41 காலை
Fernandez
Share
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்
SHARE

பணத்திமிரும் அதிகார பலமும் பச்சிளம் குழந்தைகளின் கதறலை மழுங்கடித்துவிடுமா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய டிஜிட்டல் சான்றுகள் குறித்து காவல்துறை சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில், எவ்வித அதிகாரத் தலையீடோ அல்லது வெளித் தாக்கமோ இன்றி, அறிவியல் மற்றும் சட்டரீதியான ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே புலனாய்வு அமைவது தலையாய கடமையாகும் என்று அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், இதில் சமூகச் செல்வாக்கு, பணபலம், பதவி ஆகியவற்றுக்கு இடமில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமின்றி, இதற்குத் துணைபோனவர்கள், மறைமுகமாகத் தொடர்புடையவர்கள் என அனைவரின் பங்கும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு, தகுந்த பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று வேல்முருகன் கோரியுள்ளார். மேலும், இவ்விகவாரம் தொடர்பாக முன்னதாகப் பெறப்பட்ட புகார்களை உரிய முறையில் விசாரிக்கத் தவறியவர்கள், புலனாய்வில் சுணக்கம் காட்டியவர்கள், ஆதாரங்களைப் புறக்கணித்தவர்கள் அல்லது உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் முடக்கியவர்கள் யார் என்பதும் தனியாகப் புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது சட்டப்பூர்வக் கடமையை வேண்டுமென்றே புறக்கணித்ததோ அல்லது ஆதாரங்களைச் சிதைக்க முயன்றதோ தெரியவந்தால், அவர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் துறை ரீதியாகவும் குற்றவியல் ரீதியாகவும் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், கைப்பற்றப்பட்ட காணொளிகள் மற்றும் மின்னணுச் சாதனங்கள் முறையான தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்றுகளின் நம்பகத்தன்மை சட்டப்படி உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு அரசியல் நோக்கங்களுக்கான தளமாக மாறக் கூடாது என்றும், அதே தருணத்தில் அதிகார பலத்தால் உண்மை குழிதோண்டிப் புதைக்கப்படவும் கூடாது என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். உண்மையை அறிவியல் சான்றுகள் நிலைநாட்டட்டும், குற்றவாளிகளை நேர்மையான புலனாய்வு அடையாளப்படுத்தட்டும், நீதிமன்றம் உரிய தண்டனையை விரைந்து வழங்கட்டும், கடமை தவறியோருக்கும் சட்டம் தன் பதிலை அளிக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை உரிய கண்காணிப்புடன் மறுஆய்வு செய்து, டிஜிட்டல் சான்றுகளின் உண்மைத்தன்மையை விரைந்து உறுதிசெய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், முந்தைய கட்டங்களில் இவ்வழக்கை நேர்மையாகக் கையாளத் தவறியவர்கள் மீதும் தயவுதாட்சண்யமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட தரப்பிற்கு முழுமையான நீதியைத் தமிழ்நாடு அரசு பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Gem VeeramaniPOSCO caseTamizhaga Vazhvurimai KatchiVelmuruganஅதிகார பலம்குழந்தைகள் பாதுகாப்புதமிழக வாழ்வுரிமைக் கட்சிபணபலம்போக்சோ வழக்குவேல்முருகன்ஜெம் வீரமணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பாகற்காய் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல் உணவுப் பையில் உள்ள பூச்சிகளை அழிக்கும் பாகற்காய்!
Next Article பிரபல பாலிவுட் நடிகர் முஷ்டாக் கான் பிரபல பாலிவுட் நடிகர் முஷ்டாக் கான் காலமானார்: புற்றுநோய் பாதிப்பால் உயிர் பிரிந்தது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பேரணி அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மும்பையில் பேரணி: தாக்கரே சகோதரர்கள் அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கண்டித்து, நவநிர்மாண் சேனா மற்றும் சிவ சேனா (யுபிடி)…

செப்டம்பர் 29, 2026

தேர்தல் ஆணையர் பதவி நீக்கம்: காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம்…

செப்டம்பர் 29, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில்…

செப்டம்பர் 29, 2026

ராகுல் காந்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக…

செப்டம்பர் 29, 2026

ஜெய் ஸ்ரீராம் முழக்கம் சர்ச்சை: ரேவந்த் ரெட்டி விளக்கம்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'ஜெய் ஸ்ரீராம்'…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சதாப்தி, உழவன் எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சதாப்தி மற்றும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் குமார் மாநாட்டில் பேசுகிறார்
தமிழ்நாடு

சென்னையில் விரைவில் ‘ஏ.ஐ. நகரம்’: அமைச்சர் குமார் அறிவிப்பு

சென்னையில் விரைவில் 'ஏ.ஐ. நகரம்' அமைக்கப்படும் என அமைச்சர் குமார் அறிவித்துள்ளார். இது AI வளர்ச்சிக்கு முக்கிய மையமாக அமையும்.

2 Min Read
தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு

கச்சத்தீவு விவகாரம்: பேரவையில் திமுகவினர் அமளி!

தமிழக சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அமைச்சர் என்.ஆனந்த் கருத்து தெரிவித்ததை அடுத்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதுகுறித்து திமுக கொறடா எ.வ.வேலு விளக்கம் அளித்தார்.

2 Min Read
தமிழ்நாடு

தங்க முலாம் பூசப்பட்ட தகரம் தான் கவர்னர் உரை – டிடிவி தினகரன்

ஆளுநரின் இன்றைய உரை தங்க முலாம் பூசப்பட்ட தகரம் போன்றது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசியது ஏன் என்றும் அவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?