MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழ்நாடு

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

Fernandez
Last updated: செப்டம்பர் 24, 2026 9:59 மணி
Fernandez
Share
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்
SHARE

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எழுந்துள்ள அதிர்ச்சி தரும் தகவல்கள் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், அவர் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்த (SIR) நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்திகளின்படி, தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இருவர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் கடந்த 10 மாதங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக 14 முறை முறையான ஆட்சேபனைகளைத் பதிவு செய்துள்ளனர். இது தேர்தல் ஆணையத்தின் உள் செயல்பாடுகள் மற்றும் முடிவெடுக்கும் முறை குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தங்களது அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த உள்மோதலின் மையமாக 13 கோடி வாக்காளர்களின் பெயர்களைப் பாதிக்கும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) அமைந்துள்ளது. புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவம் 6-ல் அங்கீகாரமற்ற, சட்டவிரோத மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

மேலும், தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள் மூலம் வாக்காளர் பட்டியல் தரவுத்தளம் படிப்படியாக மையப்படுத்தப்படுவது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மையப்படுத்தப்பட்ட மென்பொருள், கள அளவில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களின் (ERO) முடிவுகளை மீறி செயல்படுவதால், தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவது தடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் அமைப்புகளை இவ்வாறு மையப்படுத்துவது, தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் பாரம்பரியமாகக் கொண்டிருந்த பரவலாக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பை வலுவிழக்கச் செய்யும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோவாவில் ஏற்பட்ட மென்பொருள் பிரச்சினைகளால், உச்சநீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், வாக்களிக்கத் தகுதியுடைய 97 பேர் வாக்களிக்கும் உரிமையை இழந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டின் சட்டம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருமித்த முடிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் உள்மோதல் அதன் அரசியலமைப்புச் செயல்பாடு குறித்த தீவிரமான கவலைகளை ஏற்படுத்துகிறது.

இந்த ஆட்சேபனைகளின் நகல்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் மட்டுமே வெளிப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களே முடிவெடுக்கும் செயல்முறையிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மிகவும் கவலைக்குரியது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR நடவடிக்கைகள் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாகிறது. SIR நடவடிக்கையின் அடிப்படையில் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்றும், அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்தல்களும் சட்டவிரோதமானவையே என்றும் அர்விந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கோருவதில் நியாயம் உள்ளதாக திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தாமாக முன்வந்து உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து SIR நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயிர்நாடியாக விளங்கும் வாக்குரிமையையும், தேர்தல் ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ECIElection CommissionGyanesh KumarThirumavalavanVCKஇந்திய தேர்தல் ஆணையம்ஞானேஷ்குமார்திருமாவளவன்தேர்தல் ஆணையம்விடுதலை சிறுத்தைகள் கட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தமிழக அரசு ரத்து செய்த திட்டங்கள் குறித்த செய்தி தவெக அரசு ரத்து செய்த திட்டங்கள்: மக்கள் மத்தியில் அதிர்ச்சி
Next Article சென்னை மாநகராட்சி சாலை சீரமைப்பு பணிகள் வடகிழக்கு பருவமழை: சென்னை சாலைகள் சீரமைப்புக்கு ரூ.300 கோடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின் பலன்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா

இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம்…

நவம்பர் 13, 2026

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு…

நவம்பர் 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்: திருமாவளவன் விளக்கம்

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் தொடர் ராஜினாமாக்கள் ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்றும், எந்த இடைத்தேர்தலிலும் விசிக போட்டியிடாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

1 Min Read
யூடியூப் லோகோ மற்றும் பணமாக்கல் தொடர்பான கிராபிக்ஸ்
தமிழ்நாடு

யூடியூப் சேனல் பணமாக்க புதிய, கடினமான விதிகள்!

யூடியூப் சேனல்களுக்கான பணமாக்கும் தகுதி வரம்புகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. புதிய விதிகள் பிப்ரவரி 1, 2027 முதல் அமலுக்கு வருகின்றன.

2 Min Read
பாலியல் தொந்தரவு புகாரில் கைது செய்யப்பட்ட மருத்துவர்
தமிழ்நாடு

சென்னையில் செவிலியரிடம் தவறாக நடக்க முயன்ற மருத்துவர் கைது

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளம் செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றதாக 60 வயது மருத்துவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட செவிலியர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை…

1 Min Read
தமிழ்நாடு

தெற்கு ஆத்தூர் டாஸ்மாக் கடை மூடல்: மக்கள் கொண்டாட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடை, தமிழக முதல்வர் உத்தரவால் அதிரடியாக மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?