MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வீரமணி வழக்கு: மறைக்க முயன்றவர்கள் மீது தனி வழக்கு – அன்புமணி ராமதாஸ்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வீரமணி வழக்கு: மறைக்க முயன்றவர்கள் மீது தனி வழக்கு – அன்புமணி ராமதாஸ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வீரமணி வழக்கு: மறைக்க முயன்றவர்கள் மீது தனி வழக்கு – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு

வீரமணி வழக்கு: மறைக்க முயன்றவர்கள் மீது தனி வழக்கு – அன்புமணி ராமதாஸ்

Fernandez
Last updated: செப்டம்பர் 23, 2026 6:13 மணி
Fernandez
Share
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
SHARE

சென்னை: தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்புடைய சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகளை தப்பிக்கச் செய்ய முயன்றவர்கள் மீதும் தனி வழக்குப்பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் தொழிலதிபர் ஜெம் வீரமணி என்பவரால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தினமும் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிறுமிகள் சீரழிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருந்தும், குற்றவாளிகளை தப்பிக்கச் செய்ய கடந்த காலங்களில் முயற்சி செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

குழந்தைகளை தெய்வமாகக் கொண்டாடும் தமிழர்களின் பண்பாட்டை மீறி, குழந்தைகளின் வறுமையைப் பயன்படுத்தி, தங்களிடம் உள்ள கோடிக்கணக்கான பணத்தை ஆயுதமாகக் கொண்டு சமூகத்தில் பெரிய மனிதர்கள் போர்வையில் இருப்பவர்கள் அவர்களை சீரழிப்பதை சகித்துக் கொள்ள முடியாது. இந்த கொடுமை பல பத்தாண்டுகளாக தொடர்ந்திருக்கிறது.

கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதியே இது குறித்து காவல்துறையில் ஆதாரங்கள் அளிக்கப்பட்ட போதிலும், தொடர் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக, போதிய ஆதாரங்கள் இல்லாததாகக் கூறி, அந்த வழக்கு கைவிட அனுமதி கோரி கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால், அந்த மனுவை ஏற்க நீதிபதி மறுத்து விட்டதன் பயனாகவே, இந்த கொடுமையில் சம்பந்தப்பட்ட பலரும் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் சென்னை போக்சோ நீதிமன்றம் காட்டிய அக்கறையும், கடுமையும் பாராட்டத்தக்கவை.

சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விசாரணையில் தெரியவரும் தகவல்களின் அடிப்படையில், தேவைப்பட்டால் போக்சோ வழக்கு பிரிவுகளை மாற்ற வேண்டும்.

சிறுமி சீரழிக்கப்பட்டது மட்டுமின்றி, அதற்கு துணையாக இருந்தவர்கள், வழக்கிற்கு மூடுவிழா நடத்த முயன்றவர்கள் ஆகியோரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Anbumani RamadossChennai POCSO CourtPMKVeeramani Caseஅன்புமணி ராமதாஸ்சிறுமி பாலியல் வன்கொடுமைசென்னை போக்சோ நீதிமன்றம்பாமகவீரமணி வழக்கு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வு மாணவர் பட்டியல் சமர்ப்பிப்பு தொடக்கம் சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு தேர்வு: மாணவர் பட்டியல் சமர்ப்பிப்பு இன்று தொடக்கம்
Next Article திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையர் பதவி விலக கோரிக்கை வாக்காளர் பட்டியல் குளறுபடி: ஞானேஷ் குமார் பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

நெசவுத் தொழில் நெருக்கடி குறித்துப் பேசும் வேல்முருகன்
தமிழ்நாடு

நெசவுத் தொழில் அழிவை நோக்கி? வேல்முருகன் கேள்வி

நூல் விலை உயர்வால் தமிழக நெசவுத் தொழில் முடங்கும் அபாயம். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேல்முருகன் கோரிக்கை.

2 Min Read
தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு
தமிழ்நாடு

Gen Z இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றனர்: ஆளுநர் அர்லேகர்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் அர்லேகர், ஜென் இசட் இளைஞர்களை பலர் தவறாக வழிநடத்துவதாகக் கூறினார். சான்றிதழ் விவகாரத்தில் மன்னிப்புக் கோரினார்.

2 Min Read
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி
தமிழ்நாடு

வங்கி மேலாளரை அறைந்த அழகிரி மகள் கயல்விழி மீது வழக்குப்பதிவு

சென்னையில் எஸ்பிஐ வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த மு.க. அழகிரியின் மகள் கயல்விழி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லிப்ட் பிரச்சனை தொடர்பாக வாக்குவாதத்தில்…

1 Min Read
இன்ஸ்டா மார்ட் செயலி மூலம் எல்.பி.ஜி. சிலிண்டர் ஆர்டர் செய்யும் காட்சி
தமிழ்நாடு

இன்ஸ்டா மார்ட்டில் எல்.பி.ஜி. சிலிண்டர்: புதிய சேவை அறிமுகம்!

ஸ்விக்கியின் இன்ஸ்டா மார்ட், இந்துஸ்தான் பெட்ரோலியம் உடன் இணைந்து ஆன்-டிமாண்ட் எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரி சேவையை பெங்களூருவில் தொடங்கியுள்ளது. புதிய ஹெ.பி. நவ்யா சிலிண்டர் எடை குறைவு,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?