MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஹர்திக் பாண்டியாவுடன் நிதிஷ் குமார் ரெட்டியை ஒப்பிடுவது தவறு: மோஹித் சர்மா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஹர்திக் பாண்டியாவுடன் நிதிஷ் குமார் ரெட்டியை ஒப்பிடுவது தவறு: மோஹித் சர்மா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ஹர்திக் பாண்டியாவுடன் நிதிஷ் குமார் ரெட்டியை ஒப்பிடுவது தவறு: மோஹித் சர்மா

விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவுடன் நிதிஷ் குமார் ரெட்டியை ஒப்பிடுவது தவறு: மோஹித் சர்மா

Sri Prem Kumar R
Last updated: செப்டம்பர் 21, 2026 1:53 மணி
Sri Prem Kumar R
Share
இந்திய கிரிக்கெட் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி
SHARE

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வாய்ப்புக்காக, அவர் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சால் பல விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார் நிதிஷ் குமார்.

இதனையடுத்து, இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருக்கும் நிலையில், அவருக்கு ஒரு சிறந்த மாற்றாக நிதிஷ் குமார் ரெட்டி விளங்குவார் என ரசிகர்கள் மத்தியில் ஒரு பேச்சு எழுந்தது. ஆனால், இந்த ஒப்பீட்டை முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா முற்றிலும் மறுத்துள்ளார்.

இது குறித்து பேசிய மோஹித் சர்மா, 'ஹர்திக் பாண்டியாவுடன் நிதிஷ் குமார் ரெட்டியை ஒப்பிடுவது முற்றிலும் தவறானது. தற்போதைய சூழலில், ஹர்திக் பாண்டியாவுக்கு நிதிஷ் குமார் ரெட்டி எந்த வகையிலும் இணையாக முடியாது. இப்படித் தேவையின்றி ஒப்பிடுவதால், நிதிஷ் ரெட்டி மீதான எதிர்பார்ப்பு அளவுக்கு அதிகமாக எகிறிவிடும்' என்று அவர் கூறினார்.

மேலும் அவர் தனது கருத்தை விரிவாகக் கூறுகையில், 'ஹர்திக் பாண்டியா களமிறங்கும் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றும் அசாத்திய திறமை கொண்டவர். ஆனால் நிதிஷ் ரெட்டி அப்படிப்பட்ட ஆட்டக்காரர் அல்ல. அவர் களத்தில் சிறிது நேரம் நிலைத்து நின்று பந்துகளை எதிர்கொண்ட பிறகே தனது அதிரடியைத் தொடங்குவார். எனவே அவரிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை எதிர்பார்ப்பது நியாயமல்ல. அவரது தனிப்பட்ட திறமைக்கு ஏற்பவே அவரை நாம் பயன்படுத்த வேண்டும்' என வலியுறுத்தினார்.

நிதிஷ் குமாரின் பந்துவீச்சுத் திறனைப் பற்றியும் மோஹித் சர்மா கருத்து தெரிவித்தார். 'சர்வதேச அரங்கில் எதிரணியை மிரட்டும் அளவுக்கு தனது பந்துவீச்சுத் திறனையும் நிதிஷ் குமார் ரெட்டி இன்னும் மெருகேற்ற வேண்டியுள்ளது. எனவே அவர் மீது அதிக சுமையை ஏற்றாமல், நிதானமாக அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என்று மோஹித் சர்மா தெரிவித்தார்.

2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறும் வீரர்களை அடையாளம் காணும் பணியில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில், வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு இணையான மாற்று வீரராக வேறு யாரும் இல்லாத காரணத்தினால், நிதிஷ் குமார் ரெட்டிக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் இடமில்லை.. உத்தரபிரதேச தேர்தலில் நிற்கும் முகமது ஷமி? மத்திய அமைச்சருடன் சந்திப்பு என்ற செய்தியும் தற்போது பரவி வருகிறது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Hardik PandyaMohit SharmaNitish Kumar Reddyஆல்-ரவுண்டர்இந்திய கிரிக்கெட்நிதிஷ் குமார் ரெட்டிமோஹித் சர்மாஹர்திக் பாண்டியா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இரண்டு தலைகளுடன் காணப்படும் அரிதான ஆமைக் குஞ்சு 5.2 கிராம் எடையில் இரண்டு தலை ஆமை: உலகை வியப்பில் ஆழ்த்திய அதிசயம்!
Next Article செங்கோட்டை-ஈரோடு ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதைக் குறிக்கும் அறிவிப்புப் பலகை செங்கோட்டை-ஈரோடு ரயில் சேவை மாற்றம்: பராமரிப்பு பணி அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடகாவில் காட்டு யானைகள் இடமாற்றம் செய்யக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார்

யானைகளை இடமாற்றம் செய்யக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

கர்நாடகாவில் காட்டு யானைகள் தாக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், யானைகளை இடமாற்றம்…

நவம்பர் 24, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.3.81 கோடி காணிக்கை: பக்தர்கள் பரவசம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல்…

நவம்பர் 23, 2026

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் அமைச்சர்

புதுடெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில்…

நவம்பர் 23, 2026

இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடு தேவை: காங்கிரஸ்

இந்தியாவின் மூலதனச் சந்தைகளில் வெளிப்படைத்தன்மைக்கு பதிலாக வெளிநாட்டு…

நவம்பர் 22, 2026

ராஜஸ்தானில் பயங்கரம்: லாரி மீது மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த…

நவம்பர் 22, 2026

You Might Also Like

ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி கிரிக்கெட் விளையாடும் காட்சி
விளையாட்டு

2027 உலகக்கோப்பை: ரோஹித், கோலிக்கு பிசிசிஐ முக்கிய அப்டேட்?

2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் திட்டங்களில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல். பிசிசிஐயின் நீண்டகாலப் பார்வைக்கு அவர்கள் உகந்தவர்கள் என நம்பப்படுகிறது.

2 Min Read
இந்திய மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் தொடர்பான செய்தி
விளையாட்டு

இந்தியா – வங்கதேசம் கிரிக்கெட் தொடர் ரத்து? அரசியல் பூகம்பம்!

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேட்டியால் இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடர் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையே அரசியல் பதற்றம் நிலவுவதால், செப்டம்பர்…

2 Min Read
விளையாட்டு

149 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஆலி ராபின்சன்

இங்கிலாந்து வீரர் ஆலி ராபின்சன், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 149 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய…

1 Min Read
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா பெர்னாண்டோ மோதலில் ஈடுபடும் காட்சி
விளையாட்டு

ஜெய்ஸ்வால் செயலுக்கு புஜாரா, சபா கரீம் கண்டனம்: ‘இது குழந்தைத்தனமான செயல்’

இலங்கை டெஸ்ட் போட்டியின் போது அசிதா பெர்னாண்டோவுடன் மோதலில் ஈடுபட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் செயலை புஜாரா, சபா கரீம் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது குழந்தைத்தனமான செயல்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?