மேஷம் ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். உங்கள் மனக்குழப்பங்கள் நீங்கி, திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு மனமகிழ்ச்சியைத் தரும்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று மதிப்புகளும் மரியாதையும் உயரும் இனிய நாள். பணம் கொடுக்க வேண்டியவர்கள் உங்களைத் தேடி வந்து கடனைத் திருப்பித் தருவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
மிதுனம் ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள் இது. உங்கள் வருமானம் போதுமானதாக இருக்கும். எவ்வளவு சிக்கலான காரியங்களையும் விரைவாக முடித்து சாதனை படைப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள்.
கடகம் ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் வரவை விட செலவு அதிகமாகும் நாள். புதிய வரன்கள் உங்களைத் தேடி வரும். தொலைதூரத்திலிருந்து உங்களுக்கு அழைப்பு வர வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நேற்றைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும் நாள். உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். வரவு திருப்திகரமாக இருக்கும். வாகனம் வாங்கும் உங்கள் முயற்சி கைகூடும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு நல்லவர்களின் நட்பால் நன்மைகள் பெருகும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. யாரையும் நம்பி எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். மறதியால் சில தொல்லைகள் ஏற்படலாம்.
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். வாகனம் வாங்கும் உங்கள் முயற்சி வெற்றி பெறும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய பாதைகள் திறக்கும் நாள். எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். உங்கள் தொழிலில் லாபம் பெருகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
மகரம் ராசிக்காரர்களுக்கு நட்பால் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். இழந்த சேமிப்பை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள். தொழிலில் புதியவர்களை பங்குதாரர்களாக்க முயற்சிப்பீர்கள்.
கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கனத்தைக் கடைப்பிடிப்பீர்கள். பணியாளர்களின் தொல்லைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
மீனம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். திட்டமிடாமல் செய்யும் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். தொலைதூரப் பயணங்களுக்கான வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
