MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வெளிநாட்டில் வசிக்கும் பக்தரின் வாழ்வில் சாய் பாபா நிகழ்த்திய அற்புதம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வெளிநாட்டில் வசிக்கும் பக்தரின் வாழ்வில் சாய் பாபா நிகழ்த்திய அற்புதம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வெளிநாட்டில் வசிக்கும் பக்தரின் வாழ்வில் சாய் பாபா நிகழ்த்திய அற்புதம்!

தமிழ்நாடு

வெளிநாட்டில் வசிக்கும் பக்தரின் வாழ்வில் சாய் பாபா நிகழ்த்திய அற்புதம்!

Fernandez
Last updated: செப்டம்பர் 20, 2026 7:04 காலை
Fernandez
Share
சீரடி சாய்பாபா படம்
சித்த புருஷரான சீரடி சாய்பாபா
SHARE

சித்த புருஷரான சீரடி சாய்பாபா, தான் வாழ்ந்த காலத்திலும், தான் சமாதி அடைந்து 100 ஆண்டுகளைக் கடந்த பிறகும் கூட தனது உண்மையான பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பக்தரின் வாழ்வில் சாய் பாபா நிகழ்த்திய அற்புதம் குறித்த செய்தி மனதிற்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

இலங்கையில் பிறந்து, தற்போது லண்டன் மாநகரத்தில் வசித்து வரும் ஒரு பெண்மணி, தனது 39 ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டார். ஆரம்பத்தில் கணவருடன் நல்ல அன்னோன்யம் நிலவினாலும், திருமணம் ஆகி இரண்டு வருடங்களில் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது. இதற்கு காரணம், அந்தப் பெண்மணி 40 வயதைக் கடந்துவிட்டதால் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு இல்லை என அவரது கணவர் கூறியதே ஆகும்.

இதனையடுத்து, தம்பதியினர் இருவரும் முழுமையான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதன் முடிவில், இருவருக்கும் உடல் ரீதியாக எந்தக் குறைபாடும் இல்லை என்றும், தாராளமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரியவந்தது. இருந்தபோதிலும், இதை ஏற்றுக்கொள்ள முடியாத கணவரும் அவரது தாயாரும், அந்தப் பெண்மணியைக் குறை கூறி, கணவருக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

மிகுந்த மன உளைச்சலில் இருந்த அந்தப் பெண்மணி, ஒரு ஆன்மீக இதழில் சீரடி சாய்பாபாவின் மகிமையைப் பற்றிப் படிக்கத் தொடங்கினார். அதில், தீவிர சாய்பாபா உபாசகர் ஒருவர் பக்தர்கள் நலனுக்காக கூட்டுப் பிரார்த்தனை நடத்துவது குறித்த விவரத்தை அறிந்து, அவரைத் தொடர்புகொண்டு தனது மனக்குறையைக் கூறினார்.

அவரது குறையைக் கேட்டு ஆறுதல் கூறிய உபாசகர், அந்தப் பெண்மணிக்காக வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனையில், விரைவில் குழந்தை வரம் கிடைப்பதற்காக சாய் பக்தர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தார்.

சாய்பாபாவின் பூரண அருளாசியால் நடைபெற்ற இந்தக் கூட்டுப் பிரார்த்தனையின் விளைவாக, தற்போது அந்தப் பெண்மணி கருவுற்றுள்ளார். குழந்தை பிறக்காத மன வருத்தத்தில் இருந்த கணவர் தற்போது மிகுந்த மகிழ்ச்சியுடன், தன்னை அன்புடன் கவனித்துக் கொள்வதாகவும், கணவரின் தாயாரும் மிகுந்த அக்கறையுடன் தேவைகளை நிறைவேற்றித் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூடிய விரைவில் இந்தியா வந்து சீரடி சாய்பாபாவை தரிசிக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், தனக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்த சாய் பக்தர்களுக்கும், சாய் பாபாவிற்கும் தான் என்றென்றும் நன்றியுடையவளாக இருப்பதாகவும் அந்தப் பெண்மணி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DevotionSai BabaSainathSpiritualityஆன்மீகம்சாய் பாபாசீரடி சாய் பாபாபக்தி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எடப்பாடி தொகுதியில் கல்லூரி பெண்ணை நிறுத்தி எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்போம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால்
Next Article கோவையின் பெருமாள் முடி கோயிலுக்கு மலையேற்றம் செய்யும் பக்தர்கள் கோவையின் ரகசிய ஆன்மீக ட்ரெக்கிங்: பெருமாள் முடி கோயில் சிறப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய பிரதிநிதி பேசும் காட்சி

பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரைக்கு இந்தியா பதிலடி. பாகிஸ்தானில் பொம்மை அரசாங்கம் இருப்பதாகவும்,…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

டெல்லியில் 3 மாதங்களில் 377 குழந்தைகள் நலன் சார்ந்த புகார்கள்

டெல்லியில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் போலீசார்
தமிழ்நாடு

கடலூரில் யு.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை: விசாரணை தீவிரம்

கடலூர் மாவட்டத்தில் யு.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என…

2 Min Read
தமிழ்நாடு

உளுந்து விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!

நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் உளுந்து சாகுபடி பரப்பளவு 40% குறைந்துள்ளது. இதனால் உளுந்து விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழக அமைச்சரவை: துறைகள் ஒதுக்கீடு குறித்து ஆளுநருடன் முதல்வர் தனிச்செயலாளர் சந்திப்பு!

தமிழக முதலமைச்சரின் தனிச்செயலாளர் செந்தில்குமார், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 109வது பிறந்தநாள்
தமிழ்நாடு

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 109வது பிறந்தநாள்: அன்புமணி ராமதாஸ் புகழஞ்சலி

முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 109வது பிறந்தநாளில் அவருக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழஞ்சலி செலுத்தினார். சமூகநீதிக்காக அவர் ஆற்றிய பணிகளைப் போற்றுவதாக அன்புமணி ராமதாஸ்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?