7 மாத கர்ப்பிணி காதலி கொலை: காதலன் கைது

சேலம் அருகே விவசாய கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட 7 மாத கர்ப்பிணி சடலம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, 7 மாத கர்ப்பிணியான தனது காதலியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோணசமுத்திரத்தை சேர்ந்த கோகிலா (23) என்பவர், அம்மாசி (26) என்பவரால் கர்ப்பமான நிலையில், அவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாக சங்ககிரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினர் அம்மாசியுடன் பேசி, திருமணம் செய்து வைப்பதாக கூறியதால், கோகிலா அவருடன் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் கோகிலாவை காணவில்லை என அவரது தந்தை கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், வெள்ளாளபுரத்தில் உள்ள விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் கோகிலாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

காவல்துறையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல், சமாதானம் பேசி அனுப்பி வைத்ததன் விளைவாகவே இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கோகிலாவை கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதாக அவரது காதலன் அம்மாசி ஒப்புக்கொண்டுள்ளார். திருமணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அம்மாசி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து கொங்கணாபுரம் காவல்துறையினர் அம்மாசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version