56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு அதிரடி

தமிழ்நாட்டில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை, மதுரை, ஈரோடு, நாகை, திருநெல்வேலி, மயிலாடுதுறை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி.) பணியிடங்கள் மாற்றப்பட்டுள்ளன.

புதிய நியமனங்களின்படி, நெல்லை மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தின் எஸ்.பி.யாக பூக்கிய சிநேக பிரியா பொறுப்பேற்கிறார். சேலம் மாவட்டத்தின் எஸ்.பி.யாக குத்தாலிங்கம், திருவண்ணாமலை மாவட்டத்தின் எஸ்.பி.யாக ஏசி கார்த்திகேயன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கடலூர் மாவட்டத்தின் எஸ்.பி.யாக விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யாக சாய் பிரனீத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக ஜெயக்குமார், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக மதிவாணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக கவுதம் கோயல், தருமபுரி மாவட்ட எஸ்.பி.யாக அருண் கபிலன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக ஜி.அனிதா, நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக யாதவ் கிரீஷ் அசோக் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்ட எஸ்.பி.யாக செல்வகுமார், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக சிரிஷ்டி சிங் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்ட எஸ்.பி.யாக கேல்கர் சுப்ரமணிய பாலசந்திரா, தேனி மாவட்ட எஸ்.பி.யாக கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், க்யூ பிரிவு சிஐடி எஸ்.பி.யாக அரவிந்த், மதுரை மாவட்ட எஸ்.பி.யாக தேவநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version