வெற்றி சான்றிதழை மறந்ததால் எம்எல்ஏவாக பதவியேற்காத 2 அமைச்சர்கள்

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.

சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார். தமிழக மக்களுக்காக உழைக்க தன்னை இயந்திரமாய் மாற்றிக்கொண்ட முதல்வரை வணங்குகிறேன் என தற்காலிக சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பிரபு ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதியின் எம்எல்ஏவாக பதவியேற்றனர்.

எம்எல்ஏவாக பதவியேற்க வந்தவர்களில் இருவர் வெற்றிச்சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் பதவியேற்க முடியவில்லை. தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற 9 அமைச்சர்களில் 8 பேர் இன்று எம்எல்ஏவாக பதவியேற்றனர்.

அமைச்சர் கீர்த்தனா, அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் வெற்றிச் சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் பதவியேற்க முடியவில்லை.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version