யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞர்கள் கைது!

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

தூத்துக்குடியில், யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்கச் செய்து வீடியோ வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (22), அமுதா நகரைச் சேர்ந்த பிரகாஷ் (23), மற்றும் சுடலை காலனியைச் சேர்ந்த குரு (21) ஆகிய மூன்று நண்பர்களும் சேர்ந்து, அலெக்ஸின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளனர். பின்னர், அவர்கள் தயாரித்த வெடிகுண்டுகளை திறந்த வெளியில் வெடிக்கச் செய்து, அதன் வீடியோவை எடுத்துள்ளனர்.

இந்த வீடியோவை அலெக்ஸ் தனது பிறந்தநாள் வாழ்த்தாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும், இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். இந்த விஷயம் காவல்துறை கவனத்திற்கு வந்ததையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரகாஷ், இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தென்பாகம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, தென்பாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த அலெக்ஸ், பிரகாஷ், குரு ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், யூடியூபில் பார்த்து நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து, வெடிக்கச் செய்து பயிற்சி எடுத்ததாகவும், தங்கள் பகுதியில் சிலரிடம் கெத்து காட்டுவதற்காக இவ்வாறு செய்ததாகவும் கைதான இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களின் வீடுகளிலும் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என காவல்துறையினர் சோதனை நடத்தினர். எனினும், அவர்களது வீடுகளில் எந்தவிதமான நாட்டு வெடிகுண்டுகளும் கைப்பற்றப்படவில்லை.

மேலும், இந்த இளைஞர்கள் ஏதேனும் கோஷ்டி மோதல்களில் ஈடுபடுவதற்காக வெடிகுண்டுகளைத் தயாரித்தார்களா அல்லது வேறு ஏதேனும் சதிச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டார்களா என்பது குறித்தும் தென்பாகம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version