மாம்பாக்கம் நகைக் கடையில் 3 பவுன் திருடிய பெண் கைது!

சென்னையை அடுத்த மாம்பாக்கத்தில் பரபரப்பு! நகைக் கடைக்குள் புகுந்து 3 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற பெண் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்போரூர் அருகே கொளத்தூர் செல்லும் சாலையில் ரமேஷ் லால் என்பவர் நடத்தி வரும் நகைக்கடையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

நேற்று முன்தினம், ஒரு பெண் நகை வாங்குவது போல் கடைக்குள் வந்துள்ளார். கடை உரிமையாளர் ரமேஷ் லால் அவரிடம் சில நகைகளைக் காட்டியுள்ளார். அப்போது, அந்தப் பெண் தான் கொண்டு வந்திருந்த கவரிங் நகையை வைத்துவிட்டு, 3 பவுன் தங்க நகையைத் திருடி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக கடை உரிமையாளர் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில், நகை திருடிய பெண் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மோனா (28) என்பதும், அவர் கொளத்தூர் ஊராட்சியில் உள்ள கண்ணாபுரத்தில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அவர் ஒரு முன்னாள் இந்தி ஆசிரியை என்பதும் விசாரணையில் அம்பலமானது.

இதனையடுத்து, போலீஸார் மோனாவை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 3 பவுன் தங்க நகையையும் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version