மனைவியின் தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த கணவர்: நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம்

மனைவியின் தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த கணவர் ராமானுஜ்

வுகாத்தியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், துர்நாற்றம் வீசியதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது, ரியா என்ற பெண் கழுத்து வெட்டப்பட்ட நிலையில், தலை துண்டிக்கப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் வீடு முழுவதும் தேடியபோது, குளிர்சாதனப் பெட்டியில் ரியாவின் தலை கண்டெடுக்கப்பட்டது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ரியா கணவர் ராமானுஜ்ஜை போலீசார் தேடி வந்தனர். சில மாதங்களுக்கு முன்புதான் இவர்களது திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், ராமானுஜ் நேற்று போலீசில் சரணடைந்தார்.

நீதிமன்றத்தில் ராமானுஜ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராமானுஜ், 'நான் என் மனைவியைக் கொலை செய்துவிட்டேன். சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகு சுகர் டேடியையும் கொலை செய்வேன்' என்று பரபரப்பாகக் கூறினார்.

செய்தியாளர்கள் 'சுகர் டேடி யார்?' என்று கேட்டபோது, ராமானுஜ் பதிலளிக்க மறுத்து, ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். கொலைக்கான காரணம் மற்றும் சுகர் டேடி யார் என்பது குறித்து போலீசார் ராமானுஜ்ஜிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version