“முதல்வர் விஜய் சொன்னதை செய்து காட்டுவார் என நம்புகிறோம்” – இயக்குனர் ஏ. சற்குணம்

பிரபல இயக்குனர் சற்குணத்தின் இயக்கத்தில் துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘எக்ஸாம்’. இந்த தொடரில் அதிதி பாலன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரபரப்பு திருப்பங்கள் நிறைந்த நாடகமாக உருவாகியுள்ள எக்ஸாம் வெப் தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற 15ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

இந்த தொடரின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சற்குணம் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் பேசியதாவது: “போட்டி தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என தமிழக முதல்வர் விஜய் தனது வாக்குறுதியில் தெரிவித்துள்ளார். அதை அவர் நிச்சயமாக செய்து காட்டுவார் என நான் நம்புகிறேன். மேலும், ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருந்தால் தேர்வுகளில் எந்தவிதமான முறைகேடும் நடைபெறாது” என கூறினார். இயக்குனர் சற்குணத்தின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version