அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.கே.சசிகலா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் சக்கரவர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர் சக்கரவர்த்தி, இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வி.கே.சசிகலா இந்த அமைப்பில் இணைந்து பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார்.
ஆனால், தேர்தல் முடிந்த பின்னர் அவர் எந்தவொரு கட்சிப் பணிகளிலும் ஈடுபடவில்லை என்றும், கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரைத் தொடர்புகொண்டு சந்திக்க முயற்சித்தும், அவரைச் சந்திக்க முடியவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
'தேர்தல் நேரத்தில் எங்களை சசிகலா பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொண்டார். அவரால் கட்சிக்கு எந்த செயல்பாடும் இல்லை' என்று தலைவர் சக்கரவர்த்தி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நீக்கம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் வி.கே.சசிகலாவின் நீக்கம் அதிகாரப்பூர்வமாகத் தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்றும் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளார். இது கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

