விராட் கோலி தாடிக்கு பின்னால் இருக்கும் ரகசியம்: மனைவி அனுஷ்கா சர்மா கொடுத்த அறிவுரை!

விராட் கோலி தனது தாடியுடன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் காட்சி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி, களத்தில் அவரது அதிரடி ஆட்டத்திற்கும், ஆக்ரோஷமான செயல்பாட்டிற்கும் பெயர் பெற்றவர். கூகிளில் விராட் கோலி எனத் தேடினால், அவரது பெரும்பாலான புகைப்படங்களில் தாடியுடனான தோற்றமே இடம்பெற்றிருக்கும். 37 வயதான கோலி, ஃபேஷன் விஷயங்களில் அதிக கவனம் செலுத்துபவர். தனது தலைமுடியை வெட்டுவதற்கே சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவிடுவார் என கூறப்படுகிறது. இவ்வளவு ஃபேஷன் உணர்வு கொண்ட விராட் கோலி, ஏன் தனது தாடியை முழுமையாக ஷேவ் செய்யாமல் இருக்கிறார் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், விராட் கோலி தாடியின்றிதான் வலம் வந்தார். ஆனால், காலப்போக்கில் லேசாக தாடியை வளர்க்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில், தாடியை முழுமையாக ஷேவ் செய்யாமல், அதை ஒரு ஸ்டைலாக மாற்றிக்கொண்டு வலம் வரத் தொடங்கினார். தற்போது அவருக்கு வயது ஏற ஏற, தாடியில் அங்கங்கே நரை முடிகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. ஆனாலும், அவர் தாடியை ஷேவ் செய்வதில்லை.

விராட் கோலியின் சக வீரரும், நண்பருமான ரோகித் சர்மா, பல போட்டிகளில் தாடியின்றி பங்கேற்றுள்ளார். தற்போதும்கூட அவர் கிளீன் ஷேவ் லுக்கில் காணப்படுகிறார். ஆனால், விராட் கோலி கடைசியாக தாடியை ஷேவ் செய்து சுமார் பத்து முதல் 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில், விராட் கோலி தனது தாடியை ஷேவ் செய்யாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரது மனைவி அனுஷ்கா சர்மா தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாகும். தனது மனைவிக்கு மிகுந்த மரியாதை கொடுக்கும் விராட் கோலி, அவர் கூறிய அறிவுரையின் பேரில்தான் தாடியை எடுக்காமல் இருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பே அனுஷ்கா சர்மாவுடன் காதலில் இருந்தபோது, 'நீ முழு தாடியுடன் இருக்கும்போதுதான் மிகவும் அழகாகவும், முதிர்ச்சியுடனும் தெரிகிறாய். இந்த தாடியை எடுத்துவிட்டால் சிறு குழந்தையைப் போல் மாறிவிடுகிறாய். எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் தாடியை முழுமையாக ஷேவ் செய்யாதே' என்று அனுஷ்கா சர்மா கூறியதாகத் தெரிகிறது.

மனைவி காதலியாக இருந்தபோது சொன்ன இந்த அறிவுரையை, அன்று முதல் இன்று வரை விராட் கோலி தொடர்ந்து பின்பற்றி வருகிறார். இதன் காரணமாகவே, அவர் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியிலும் தாடியுடன் காட்சியளிக்கிறார். இதுவே விராட் கோலியின் தாடிக்கு பின்னால் இருக்கும் முக்கிய ரகசியமாகும்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version