விநாயகர் சிலைகள் குப்பையில் வீசப்பட்டதா? உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்

தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என தமிழக உண்மை சரிபார்ப்பகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையப் பகுதியில் விநாயகர் சிலைகள் குப்பையில் வீசப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு தமிழக உண்மை சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், 'விநாயகர் சிலைகளை வீசி எறிந்ததாக பரவும் தவறான தகவல்!' என்று குறிப்பிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தியில், 'நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விநாயகர் சிலைகளை வீசி எறிந்து உடைத்து குப்பை போல் போட்டுள்ளனர்' என்று தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் செயலில் உதவி ஆய்வாளர்கள் லூக் ஹசன், ஆபிரகாம் ஜோசப் மற்றும் விஏஓ கிறிஸ்டின் ராசையா ஆகியோர் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கு உண்மை சரிபார்ப்பகம், 'உண்மை என்ன?' என்ற தலைப்பில் விளக்கம் அளித்துள்ளது. அதில், 'இது தொடர்பாக தேவர்குளம் காவல் நிலையம் அளித்துள்ள விளக்கத்தின்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) கலவையால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தற்காலிகமாக வைக்கப்பட்டன. பின்னர், வன்னிக்கோனேந்தல் ஆரம்ப சுகாதார நிலைய மருந்து சேமிப்பு கிடங்கு கட்டடத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்டன. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தற்காலிகமாக சிலைகள் வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இது ஒரு தவறான தகவல் என்றும், பொதுமக்கள் இது போன்ற தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் தமிழக உண்மை சரிபார்ப்பகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தச் செய்தி, ஜோசப் விஜய் ஆட்சியில் விநாயகர் சிலை குப்பையில் வீசப்பட்டதாகக் கூறி பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version