பள்ளியில் ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகி பதவி பறிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள தளவராம்பூண்டி அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையில், தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மற்றும் சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மாணவர்களிடம், “இது யாருனு தெரிகிறதா? இவர் என்னவா இருக்கிறார்?” என்று கேட்டு, முதலமைச்சர் விஜய் படத்தை வகுப்பறையில் மாட்டி ரீல்ஸ் எடுத்தது கண்டனங்களுக்கு உள்ளானது. இந்த செயல்பாடு சமூக வலைத்தளங்களில் பரவி, பரவலான விமர்சனங்களை சந்தித்தது.

இந்த விவகாரத்தில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷை கட்சியிலிருந்து நீக்குவதாக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி வகுப்பறையை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதும், மாணவர்களிடம் இது போன்ற கேள்விகளைக் கேட்டு ரீல்ஸ் எடுத்ததும் பல தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்த நடவடிக்கை, கட்சி நிர்வாகிகளிடையே ஒரு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version