விஜய்யின் பொருளாதார இலக்கு: நிதி ஆயோக் துணைத் தலைவர் பாராட்டு

முதல்வர் விஜயின் பொருளாதார பார்வை என்னை கவர்ந்தது என நிதி ஆயோக் துணைத் தலைவர் அசோக் குமார் லஹிரி கூறியுள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றார். அங்கு தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.

குறிப்பாக, உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும், இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்றும், 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதே தமிழ்நாட்டின் இலக்கு என்றும் முதல்வர் விஜய் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் துணைத் தலைவர் அசோக் குமார் லஹிரி, 'சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன்… He is very Impressive. தமிழ்நாடு 2035க்குள் $1.5 டிரில்லியன் பொருளாதாரமாக வளர வேண்டும் என்ற முதலமைச்சர் விஜயின் தொலைநோக்கு பார்வை என்னை மிகவும் கவர்ந்தது. திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த தலைவரை முதன்முறையாக நேரில் சந்தித்தபோது, அவரது வளர்ச்சி இலக்கும் தெளிவான பார்வையும் ஆழமாக ஈர்த்தது' எனப் பாராட்டினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version