Vespa S 150: 337 கி.மீ மைலேஜ் தரும் ஸ்கூட்டர் – வாங்கலாமா?

இந்தியாவில் ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்கூட்டர் விற்பனையில் தனி கவனம் செலுத்தி வரும் Vespa நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. Vespa S 150 ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்து விரிவாகக் காணலாம்.

இந்த ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட்கள் உள்ளன. S 150 Standard மாடல் ரூபாய் 1 லட்சத்து 79 ஆயிரத்து 604-க்கும், S 150 Tech 150 மாடல் ரூபாய் 2 லட்சத்து 39 ஆயிரத்து 621-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாவது வேரியண்டில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன் போன்ற வசதிகள் உள்ளன.

இந்த ஸ்கூட்டரில் 149.5 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 115 கிலோ ஆகும். இதன் இருக்கை 770 மி.மீட்டர் உயரம் கொண்டது. 7,500 ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 93 கி.மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். பிஎஸ்6 பேஸ் 2 பி எமிஷன் ஸ்டாண்டர்ட் வசதி இதில் உள்ளது.

Vespa S 150 ஸ்கூட்டரில் 7.4 லிட்டர் டேங்கர் உள்ளது. இந்த ஸ்கூட்டர் 35 முதல் 45 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதனால், ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 337 கி.மீட்டர் வரை பயணிக்க முடியும். இதில் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதியும் உள்ளது. இந்த ஸ்கூட்டர் சாம்பல், கருப்பு, வெள்ளி கலந்த வண்ணம், கருப்பு, சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட 10 வண்ணங்களில் கிடைக்கிறது.

சிறப்பு அம்சங்களாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்பக்கம் டிஸ்க் பிரேக், பின்பக்கம் ட்ரம் பிரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கம் 11 இன்ச் மற்றும் பின்பக்கம் 10 இன்ச் சக்கரங்கள் உள்ளன. ஹைட்ராலிக் சிங்கிள் ஆர்ம் சஸ்பென்ஷன் முன்பக்கத்திலும், பின்பக்கம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. 60 ஆயிரம் கி.மீட்டர் அல்லது 5 வருட வாரண்டியும், 4 இலவச சர்வீஸ்களும் வழங்கப்படுகின்றன.

செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஸ்பீடோமீட்டர் அனலாக் வசதி, ஓடோமீட்டர், ப்யூல் காஜ் டிஜிட்டல் வசதி, 2 ட்ரிப்மீட்டர்கள் டிஜிட்டலில், லோ ப்யூல் இண்டிகேட்டர், செல்ஃப் ஸ்டார்ட் வசதி, சைட் ஸ்டாண்ட் என்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி, எல்இடி முகப்பு விளக்குகள், பகலில் எரியும் விளக்குகள், ஹாலோஜன் விளக்குகள் பிரேக்/டெயில் விளக்குகள் போன்ற வசதிகள் உள்ளன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version