இந்தியாவில் வெஸ்பா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்: விலை, மைலேஜ் விவரங்கள்!

விரைவில் அறிமுகமாகும் வெஸ்பா மின்சார ஸ்கூட்டர்

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஸ்கூட்டர் விற்பனையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள வெஸ்பா நிறுவனம், தனது புதிய மின்சார ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஏதர், ஓலா போன்ற நிறுவனங்கள் மின்சார இருசக்கர வாகன சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் இந்த நேரத்தில், வெஸ்பாவின் இந்த புதிய வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஸ்கூட்டர் விற்பனையில் இந்தியாவில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் வெஸ்பா, தனது வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து மின்சார ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த Vespa Electric Scooter இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரம் வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய Vespa Electric Scooter-ல் 3.6 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த ஸ்கூட்டர் சுமார் 100 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு சுமார் 3.5 மணி நேரம் ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது ட்யூப்லெஸ் டயர்களுடன் வருகிறது.

இந்தியாவில் வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு. இந்த Vespa Electric Scooter அறிமுகமானால், அது மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்களால் வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த புதிய மின்சார ஸ்கூட்டர், தற்போது சந்தையில் பிரபலமாக உள்ள பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எஸ்1 ப்ரோ தேர்ட் ஜென், ஏதர் 450எக்ஸ் போன்ற மின்சார ஸ்கூட்டர்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்த Vespa Electric Scooter எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இது அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட வெஸ்போ எலெட்ரிகா மாடலை விட முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் இந்த புதிய Vespa Electric Scooter உருவாக்கப்பட்டுள்ளது.

தங்கள் வாகனங்களை பெரும்பாலும் பெண் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து வடிவமைக்கும் வெஸ்பா நிறுவனம், இந்த புதிய மின்சார ஸ்கூட்டரையும் அதே பாணியில் வடிவமைத்துள்ளது. இதன் அறிமுகத்திற்காக வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதன் வசீகரமான தோற்றம் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. வெஸ்பாவின் இந்த புதிய மின்சார ஸ்கூட்டர் இந்திய மின்சார வாகன சந்தையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version