Vespa 125: 288 கி.மீ மைலேஜ், அசத்தல் வசதிகள்!

இந்தியாவில் ஸ்கூட்டர் சந்தையில் தனக்கென தனி அடையாளத்தை பதித்திருக்கும் வெஸ்பா நிறுவனம், பெண்களை கவரும் வகையில் தனித்துவமான வடிவமைப்பில் Vespa 125 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் பற்றிய விரிவான தகவல்களைக் காண்போம்.

Vespa 125 ஸ்கூட்டர் மொத்தம் 4 வேரியண்ட்களில் கிடைக்கிறது. அவை: 125 Standard (ரூ. 1,58,555), 125 Tech 125 (ரூ. 2,20,568), 125 Qala Edition (ரூ. 2,20,568). மேலும், 125 Qala Edition விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த Vespa 125 ஸ்கூட்டரில் 124.5 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 115 கிலோ மற்றும் இருக்கை உயரம் 770 மி.மீ ஆகும். முதல் வேரியண்ட் தவிர மற்ற அனைத்து வேரியண்ட்களிலும் ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதிகள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் வெள்ளை, சிவப்பு, கருப்பு, நீலம் உள்ளிட்ட 9 வண்ணங்களில் கிடைக்கிறது. 9.3 பிஎச்பி குதிரை ஆற்றல் மற்றும் 10.1 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1 சிலிண்டர், ஏர் கூல்ட் மற்றும் 3 வால்வுகள் இதில் உள்ளன. பிஎஸ்6 பாஸ் 2 பி எமிஷன் ஸ்டாண்டர்டுடன், பெட்ரோலில் இயங்கும் இந்த ஸ்கூட்டரில் 7.4 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. ஒரு முறை டேங்க் நிரப்பினால் 288.6 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்பக்கம் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கம் ட்ரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள், முன்பக்கம் 11 இன்ச் மற்றும் பின்பக்கம் 10 இன்ச் டயர்கள், ட்யூப்லெஸ் டயர்கள் ஆகியவை இதில் அடங்கும். ஹைட்ராலிக் சிங்கிள் சைட் ஆர்ம் ஃபிரன்ட் சஸ்பென்ஷன் மற்றும் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் பின்பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 60 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருட வாரண்டி வழங்கப்படுகிறது. முதல் வேரியண்டில் செமி டிஜிட்டல் மற்றும் மற்ற வேரியண்ட்களில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது. ஸ்பீடோமீட்டர் அனலாக் ஆகவும், ஓடோமீட்டர், ஃபியூல் கேஜ், 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் ஆகவும் உள்ளன. ஸ்டாண்ட் அலாரம், லோ ஃபியூல் இண்டிகேட்டர், சர்வீஸ் ரிமைண்டர் இண்டிகேட்டர், செல்ஃப் ஸ்டார்ட் வசதி, சைட் ஸ்டாண்ட் இன்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி ஆகியவை இதில் உள்ள முக்கிய அம்சங்களாகும். எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் ஹாலோஜன் விளக்குகள் பிரேக் மற்றும் சிக்னல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. நெருக்கடியான போக்குவரத்து நெரிசலிலும் ஓட்டுவதற்கு மிகவும் உகந்ததாக இந்த வெஸ்பா ஸ்கூட்டர் திகழ்கிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version