வேளாங்கண்ணி: புனித ஆரோக்கிய மாதா திருவிழாவையொட்டி கடலில் குளிக்க தடை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழா, செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த பத்து நாள் திருவிழாவையொட்டி, தினமும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. இதனை காணவும், பிரார்த்தனை செய்யவும் ஏராளமான பக்தர்கள் கொடிமரம் அருகே குவிந்து வருகின்றனர்.தற்போது, ஆண்டு பெருவிழாவின் ஐந்தாவது நாள் என்பதால், வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாகவும் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் சிலர், ஆபத்தை உணராமல் கடலில் நீண்ட தூரம் சென்று குளித்து வருகின்றனர். இதனால், உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், மாவட்ட நிர்வாகமும் பேராலய நிர்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.இதன் ஒரு பகுதியாக, போலீஸ் சூப்பிரண்டு கேழ்கர் சுப்பிரமணிய பாலச்சந்திராவின் பரிந்துரையின் பேரில், வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி வரை வேளாங்கண்ணி கடற்கரையில் பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த தடையின் காரணமாக, வேளாங்கண்ணி கடற்கரை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. பக்தர்கள் கடலில் குளிப்பதற்கு பதிலாக, பேராலய வளாகத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு வருகின்றனர். திருவிழா முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version