வேளச்சேரியில் குழந்தை கடத்தல்: குடும்பத் தகராறில் தாய் கடத்தல் உறுதி

சென்னை வேளச்சேரியில் பட்டப்பகலில் பாட்டியின் கண்முன்னே 4 வயது பேத்தியை காரில் கடத்தியதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 4 பேர் கொண்ட கும்பல் குழந்தையை கடத்தியதாக முதலில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ஆதம்பாக்கம் போலீசார் மூதாட்டி சாந்தியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இச்சம்பவம் குழந்தை கடத்தல் அல்ல என்றும், குடும்பத் தகராறில் மருமகளே குழந்தையை கடத்தியதும் தெரியவந்துள்ளது. செல்போன் பயன்பாடு தொடர்பாக கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குடும்ப சண்டையின் போது, பாட்டியிடம் இருந்த 4 வயது குழந்தையை தாய், திருநங்கைகளுடன் வந்து தூக்கிச் சென்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது குழந்தை கடத்தல் அல்ல, குடும்ப பிரச்சனை என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் தாயை போலீசார் தொடர்பு கொண்டு, குழந்தையுடன் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version