வீரமணி பாலியல் வழக்கு: உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்

‘ஜெம் கிரானைட்ஸ்’ ஆர்.வீரமணி மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் கொடுமை வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜெம் கிரானைட்ஸ்’ ஆர்.வீரமணி, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் ஆதரவற்ற 100க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் என்ற போர்வையில், பண பலத்தால் ஆணவம் கொண்டு வலம் வருபவர்கள் எவ்வளவு இழிவான குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு ‘ஜெம்’ வீரமணி மீதான குற்றச்சாட்டுகள் ஒரு எடுத்துக்காட்டாகும்.

முதலில், காணொளி ஆதாரத்தில் அடையாளத்தை நிறுவ முடியவில்லை என்ற காரணத்தைக் கூறி வழக்கை முடிக்க முயன்ற நிலையில், போக்சோ நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து, வரும் 2026ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி மறு விசாரணைக்கு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. போக்சோ நீதிமன்றம் இத்தகைய உத்தரவைப் பிறப்பிக்காமல் இருந்திருந்தால், இவ்வளவு பெரிய கொடூரத்தைச் செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்திருப்பார்கள்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு வீரமணியைக் கைது செய்துள்ளதுடன், குற்றத்திற்கு உடந்தையாக இருந்த மற்றவர்களையும் கைது செய்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், அல்லது இந்த உண்மைகளை மறைக்க முயற்சித்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனையைப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில், தமிழ்நாடு அரசால் காவல்துறை ஆணையரின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், செல்வாக்கு மிக்க நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், அவர்கள் தப்பிச் செல்வதற்கான வழிகள் ஏற்கனவே உருவாக்கப்பட்ட அனுபவங்கள் உள்ள சூழலில், காவல் ஆணையரின் மேற்பார்வையில் நடைபெறும் விசாரணை போதுமானதாக இருக்காது.

எனவே, இந்த வழக்கில் உண்மையான நீதி கிடைக்க, உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் நேரடி மேற்பார்வையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தமான கோரிக்கையாகும். இந்த விசாரணை நியாயமாகவும், பாரபட்சமின்றியும் நடைபெறுவதை உறுதி செய்ய இது அவசியமாகிறது.

இந்த வழக்கில் விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது போன்ற குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என சண்முகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version