வீரமணி செயல் மன்னிக்க முடியாத குற்றம்: அமீர், வெற்றிமாறன் கண்டனம்

வீரமணி பாலியல் வழக்கு குறித்து அறிக்கை வெளியிடும் அமீர், வெற்றிமாறன்

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணியின் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இயக்குநர்கள் அமீர் மற்றும் வெற்றிமாறன் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். வீரமணியின் செயல் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் என்றும், இது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த உலகைப்பற்றியே முழுதும் அறியாத பிஞ்சுச் சிறுமிகளை குறிவைத்து அரங்கேற்றப்பட்டுள்ள இந்தத் தீய செயல்கள் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். வீரமணியை பாதுகாக்க முயன்ற அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், அல்லது அதிகாரமிக்க நபர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு, பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சட்டத்தின் முன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், பாலியல் துன்புறுத்தலால் அதிர்ச்சிக்குள்ளான அந்த சிறுமிகளுக்குத் தேவையான சட்ட, உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு அளிக்கப்படுவதோடு, அவர்களின் அடையாளமும் கண்ணியமும் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி வருங்காலங்களில் பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் மீது பாலியல் தொல்லை கொடுக்கும் குற்றவாளிக்கு எந்தவித தளர்வுகளும் இன்றி மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற குற்றச்செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க இது வழிவகை செய்யும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீரமணியின் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

மனித நேயத்தை கேள்விக்குறியாக்கும் பாலியல் குற்றங்களை செய்பவர்கள் எவராயினும் அவர்களுக்கு எதிராகவே தங்களது குரல் எப்போதும் ஒலிக்கும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version