யூனிட்டி கோப்பை கால்பந்து: ஜமைக்காவிடம் வீழ்ந்தது இந்திய அணி

லண்டனில் நடைபெற்று வரும் யூனிட்டி கோப்பை கால்பந்து தொடரில், இந்திய அணி தனது அரையிறுதி ஆட்டத்தில் ஜமைக்கா அணியிடம் தோல்வியடைந்து இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

மே 26 முதல் 30 வரை லண்டனில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, ஜமைக்கா, நைஜீரியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. 17 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் விளையாடுவதற்காக லண்டன் சென்றிருந்தது. நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், ‘தி வேலி’ மைதானத்தில் இந்திய அணி ஜமைக்கா அணியை எதிர்கொண்டது.

ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி ஜமைக்காவிடம் தோல்வியடைந்தது. இதனால், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதற்கிடையில், மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி நைஜீரிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. எனவே, இறுதிப்போட்டியில் நைஜீரியா மற்றும் ஜமைக்கா அணிகள் மோத உள்ளன.

இந்திய அணி தற்போது 3-வது இடத்திற்கான போட்டியில் ஜிம்பாப்வே அணியுடன் விளையாட உள்ளது. இந்த போட்டி மற்றும் இறுதிப்போட்டி ஆகிய இரண்டும் மே 30 அன்று நடைபெற உள்ளன. பிபா கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 136-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version