ஒரே சார்ஜில் 323 கி.மீ மைலேஜ்: Ultraviolette இ-ஸ்கூட்டர், இ-பைக்குகள் வாங்கலாமா?

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், Ultraviolette நிறுவனம் இ-ஸ்கூட்டர் மற்றும் இ-பைக் பிரிவில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் பல்வேறு மாடல்கள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்களை விரிவாகக் காண்போம்.

Ultraviolette Tesseract இ-ஸ்கூட்டர், ரூபாய் 1 லட்சத்து 51 ஆயிரத்து 578 விலையில் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 3.5 கிலோவாட், 5 கிலோவாட் மற்றும் 6 கிலோவாட் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை முறையே 162 கி.மீ, 220 கி.மீ மற்றும் 261 கி.மீ மைலேஜ் தரும் திறன் கொண்டவை. இந்த ஸ்கூட்டர் வெள்ளை, சாம்பல், சிவப்பு மற்றும் சந்தன நிறங்களில் கிடைக்கிறது.

Ultraviolette X47 Crossover இ-பைக், ரூபாய் 2 லட்சத்து 69 ஆயிரத்து 620 விலையில் 16 வேரியண்ட்களில் வருகிறது. இதில் 7.1 கிலோவாட் மற்றும் 10.3 கிலோவாட் பேட்டரி வேரியண்ட்கள் உள்ளன. இந்த பைக்குகள் 211 கி.மீ மற்றும் 323 கி.மீ வரை மைலேஜ் அளிக்கும் திறன் கொண்டவை. இதன் எடை 197 கிலோ ஆகும்.

மேலும், Ultraviolette F77 Mach 2 இ-பைக் ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரத்து 950 விலையில் 12 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதுவும் 7.1 கிலோவாட் மற்றும் 10.3 கிலோவாட் பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 211 கி.மீ மற்றும் 323 கி.மீ மைலேஜ் தரும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 155 கி.மீ ஆகும். இதே விலையில், 8 வேரியண்ட்களில் வரும் Ultraviolette F77 SuperStreet இ-பைக்கும் 211 கி.மீ மற்றும் 323 கி.மீ மைலேஜ் வழங்குகிறது.

இவை தவிர, Ultraviolette Shockwave இ-பைக் ரூபாய் 1 லட்சத்து 82 ஆயிரத்து 213 விலையில் ஒரே வேரியண்ட்டில் கிடைக்கிறது. இது 4 கிலோவாட் பேட்டரியுடன் 165 கி.மீ மைலேஜ் அளிக்கிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கி.மீ ஆகும். இதன் எடை 120 கிலோ.

சிறப்பான தோற்றம் மற்றும் அதிக மைலேஜ் காரணமாக Ultraviolette நிறுவனத்தின் இ-பைக்குகள் மற்றும் இ-ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப்மீட்டர், ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், செல்ஃப் ஸ்டார்ட், ரிவர்ஸ் மோட், பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் மற்றும் எல்இடி முகப்பு விளக்குகள் போன்ற நவீன வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version