TVS Orbiter V2: ஒரே சார்ஜில் 158 கி.மீட்டர் மைலேஜ்!

இந்தியாவில் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ், மின்சார வாகன சந்தையில் தனது கவனத்தை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, TVS Orbiter V2 மின்சார ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் சிறப்பம்சங்கள், விலை மற்றும் மைலேஜ் குறித்த விரிவான தகவல்களைக் காண்போம்.

TVS Orbiter V2 மின்சார ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை 1 லட்சத்து 19 ஆயிரத்து 381 ரூபாய் ஆகும். இதில் 3.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த ஸ்கூட்டர் 158 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 4.1 மணி நேரம் ஆகும். இதன் எடை 112 கிலோ ஆகும்.

இந்த ஸ்கூட்டர் கருப்பு – சாம்பல், கருப்பு – வெளிர் சாம்பல், கருப்பு – ஆரஞ்சு, நீலம் – அடர்நீலம் என மொத்தம் 6 வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் இருக்கை உயரம் 760 மி.மீட்டர் ஆகும். மேலும், எக்கோ மற்றும் சிட்டி என இரண்டு விதமான ஓட்டும் முறைகள் இதில் உள்ளன. இதன் உண்மையான ரேஞ்ச் 153 கிலோமீட்டர் வரை கிடைப்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

TVS Orbiter V2 ஸ்கூட்டரில் பிஎல்டிசி ஹப் மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 67 பேட்டரி ஐபி ரேட்டிங் உடன் வருகிறது. போர்ட்டபிள் சார்ஜர் வசதியும், சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இதில் இடம்பெற்றுள்ளன. முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ட்ரம் பிரேக் வசதி உள்ளது. அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்பக்க சக்கரம் 14 இன்ச் அளவிலும், பின்பக்க சக்கரம் 12 இன்ச் அளவிலும் உள்ளன.

முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்கம் டூயல் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மி.மீட்டர் ஆகும். இதன் மூலம் 150 கிலோ வரை எடையை எளிதாக இழுத்துச் செல்ல முடியும். பேட்டரிக்கு 3 வருடங்கள் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வரையிலும், மோட்டாருக்கு 3 வருடங்கள் வரையிலும் வாரண்டி வழங்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டரில் 5.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, ப்ளூடூத் மொபைல் போன் இணைப்பு, ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி ஆகியவை உள்ளன. ஸ்பீடோமீட்டர் டிஜிட்டல் வகையைச் சார்ந்தது. மேலும், டிஸ்டன்ஸ் டு எம்டி, 2 ட்ரிப்மீட்டர்கள், ஸ்டாண்ட் அலாரம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் போன்ற வசதிகளும் இதில் அடங்கும்.

கால்/எஸ்எம்எஸ் அலர்ட், நேரம் பார்க்கும் வசதி, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், க்ரூஸ் கண்ட்ரோல், செல்ஃப் ஸ்டார்ட், சைட் ஸ்டாண்ட் இன்ஜின் மோட்டார் கட் ஆஃப், ஹில் அசிஸ்ட், ரிவர்ஸ் மோட் பார்க்கிங் வசதி, ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் போன்ற நவீன அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை அறியும் வசதியும் உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள், பகலிலும் எரியும் விளக்குகள் மற்றும் எல்இடி பிரேக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. டிக்கி வசதி 34 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version