இன்றைய ராசிபலன்: 14-09-2026 – ராஜரீக காரியங்கள் வெற்றி பெறும்

14-09-2026 இன்றைய ராசிபலன்

14-09-2026 அன்று இன்றைய ராசிபலன்: இந்த நாள் ராஜரீக ரீதியிலான காரியங்கள் வெற்றி பெறவும், வழக்குகளில் சாதகமான போக்கு காணவும் உகந்ததாக இருக்கும்.

மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் நிம்மதி நிலவும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப வருமானம் உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக சிவப்பு மற்றும் நீலமும், அதிர்ஷ்ட எண்களாக 3 மற்றும் 9ம் அமையும்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று அறிவுத்திறன் மேம்படும். இனிமையான பேச்சால் கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து சீராக இருக்கும். எனினும், எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன் ஒன்றுக்கு இருமுறை யோசிப்பது நல்லது. அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக நீலம் மற்றும் மஞ்சளும், அதிர்ஷ்ட எண்ணாக 1 மற்றும் 5ம் அமையும்.

மிதுனம் ராசிக்காரர்கள் இன்று வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து, பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது அவசியம். எந்த ஒரு காரியமும் வீண் அலைச்சலுக்குப் பிறகே நிறைவேறும். வேலை தொடர்பாக அலைச்சல் ஏற்படலாம். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும், அதிர்ஷ்ட எண்ணாக 5 மற்றும் 6ம் அமையும்.

கடகம் ராசிக்காரர்களுக்கு இன்று கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை மனதில் கொண்டு சில திட்டங்களை வகுப்பீர்கள். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். எதிர்பார்த்த பணம் வந்து சேர வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த காரியங்கள் வெற்றியைத் தரும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக நீலம் மற்றும் பச்சையும், அதிர்ஷ்ட எண்களாக 2 மற்றும் 7ம் அமையும்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்று வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு மருத்துவ செலவுகளும் ஏற்படலாம். வீட்டை விட்டு வெளியில் தங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாகலாம். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமாக நீலமும், அதிர்ஷ்ட எண்ணாக 2 மற்றும் 9ம் அமையும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று பயத்துடன் வேலை செய்ய வேண்டியிருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். குடும்பத்தில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக மஞ்சளும் வெள்ளையும், அதிர்ஷ்ட எண்களாக 9 மற்றும் 3ம் அமையும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக சிவப்பு மற்றும் அடர் நீலமும், அதிர்ஷ்ட எண்ணாக 4 மற்றும் 6ம் அமையும்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்று சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்கவழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு போன்றவற்றை கையாளும் போதும், வாகனங்களில் செல்லும் போதும் மிகுந்த கவனம் தேவை. எந்த காரியத்திலும் அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பதும், வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக சிவப்பு மற்றும் வெளிர் நீலமும், அதிர்ஷ்ட எண்களாக 5 மற்றும் 6ம் அமையும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் தாமதம் ஏற்படலாம். உழைப்பு அதிகரிக்கும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக வெள்ளையும் வெளிர் நீலமும், அதிர்ஷ்ட எண்களாக 3 மற்றும் 7ம் அமையும்.

மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த காரியங்களில் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். கடின உழைப்பால் வளர்ச்சி அடைவீர்கள். பேச்சைக் கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக பச்சை, மஞ்சள், நீலம் ஆகியவையும், அதிர்ஷ்ட எண்களாக 2, 5, 7ம் அமையும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்று ராஜரீக ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து திருப்தி தரும். வீண்பழி ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக வெள்ளை, மஞ்சள், பச்சை ஆகியவையும், அதிர்ஷ்ட எண்களாக 1, 3, 5ம் அமையும்.

மீனம் ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் வியாபாரம் சற்று மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக இளஞ்சிவப்பு மற்றும் நீலமும், அதிர்ஷ்ட எண்களாக 3, 6, 9ம் அமையும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version