இன்றைய ராசிபலன் 17.5.2026: வீடு வாங்கும் யோகம் யாருக்கு?

மேஷம் ராசிக்காரர்களுக்கு மங்களகரமான செய்திகள் வீடு தேடி வரும் நாள். உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மேலும், தொழிலில் புதியவர்கள் உங்களோடு இணைவார்கள்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முயற்சிகளில் வெற்றி தரும். பிரச்சனைகள் படிப்படியாக மாறும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தத்தை அளிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.

மிதுனம் ராசிக்காரர்கள் இன்று யோசித்து செயல்பட வேண்டிய நாள். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இடம், பூமி சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். பணப் பரிவர்த்தனைகளைத் தள்ளி வைப்பது நல்லது.

கடகம் ராசிக்காரர்களுக்கு மனநிறைவு ஏற்படும் நாள். மறக்க முடியாத சம்பவங்கள் தடைபடலாம். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பம் அகலும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து சேரும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். திருமண வரன்கள் கதவைத் தட்டும். வருமானம் திருப்தி அளிக்கும்.

துலாம் ராசிக்காரர்கள் இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நேற்று செய்யாமல் விட்ட வேலை இன்று பிரச்சனையை உண்டாக்கலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழிலில் குழப்பங்கள் அதிகரிக்கலாம்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஆதாயம் தரும் தகவல்கள் கிடைக்கும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாள். மற்றவர்கள் உங்கள் முயற்சிக்கு உதவுவார்கள். பழைய வாகனத்தைப் பராமரிக்கும் எண்ணம் நிறைவேறும். தொழிலில் இருந்த தடைகள் அகலும்.

மகரம் ராசிக்காரர்கள் உற்சாகத்தோடு செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும். தொழிலில் போட்டி மனப்பான்மையுடன் இருந்தவர்கள் விலகுவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். உங்கள் செல்வாக்கு மேலோங்கும். திடீர் பணவரவு உண்டு. முன்னேற்றத்திற்கான முயற்சி வெற்றி பெறும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

மீனம் ராசிக்காரர்கள் கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்ளும் நாள். கடமைகளில் இருந்த தொய்வு அகலும். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version