இன்றைய ராசிபலன்: 25-08-2026 – தொழில், வியாபாரத்தில் வெற்றி நிச்சயம்!

25 ஆகஸ்ட் 2026 இன்றைய ராசிபலன்

25 ஆகஸ்ட் 2026, இன்றைய ராசிபலன்: இன்றைய தினம், உங்கள் பேச்சுத் திறமையால் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். நிலுவையில் உள்ள பழைய பாக்கிகள் வசூலாக வாய்ப்புள்ளது.!

மேஷம்: இன்று நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் உங்கள் மதிப்பு கூடும். பாராட்டுகளும் வந்து சேரும். இருப்பினும், மனக்கவலை மற்றும் உடல்சோர்வு ஏற்படக்கூடும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு இந்த நாளில் உற்சாகத்தைக் கொடுக்கும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்கள் வெள்ளை, மஞ்சள், பச்சை மற்றும் அதிர்ஷ்ட எண்கள் 1, 3, 5 ஆகும்.

ரிஷபம்: தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை நீங்கள் தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். பணியில் இருப்பவர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு, அன்றாட வேலைகளை உடனுக்குடன் முடிப்பார்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்கள் இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் அதிர்ஷ்ட எண்கள் 3, 6, 9 ஆகும்.

மிதுனம்: இன்று உங்களுக்கு புதிய பதவிகள் அல்லது பொறுப்புகள் கிடைக்கும். இவற்றை நீங்கள் சாதகமாகப் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் அமையும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்கள் ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் மற்றும் அதிர்ஷ்ட எண்கள் 1, 3, 5, 9 ஆகும்.

கடகம்: இந்த ராசிக்காரர்களின் குழந்தைகள் இன்று மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவார்கள். பெண்கள் மனநிறைவுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நீங்கள் பயணம் செல்ல நேரிடலாம், மேலும் மனதிற்க்குப் பிடித்தவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் உண்டு. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், நீலம் மற்றும் அதிர்ஷ்ட எண்கள் 1, 3, 9 ஆகும்.

சிம்மம்: இன்று பெரியோர்களின் சந்திப்பு உங்களுக்கு மன மகிழ்ச்சியைத் தரும். அரசியல்வாதிகள் மற்றும் உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. ரகசியங்களைக் கையாள்வதில் கூடுதல் கவனம் தேவை. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், வெள்ளை மற்றும் அதிர்ஷ்ட எண்கள் 3, 6, 9 ஆகும்.

கன்னி: இன்றைய தினம் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும், லட்சியங்கள் கைகூடும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்கள் நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு மற்றும் அதிர்ஷ்ட எண்கள் 6, 9 ஆகும்.

துலாம்: இன்று உங்களுக்கு லாபம் உண்டாகும். உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிறு சிக்கல்கள் ஏற்பட்டாலும் அவை விரைவில் மறைந்துவிடும். கவனத்துடன் செயல்பட்டால், இந்த சிக்கல்களைத் தவிர்க்கலாம். இருப்பினும், உங்கள் உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாகக் கிடைக்கலாம். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்கள் நீலம், பச்சை மற்றும் அதிர்ஷ்ட எண்கள் 2, 7 ஆகும்.

விருச்சிகம்: இன்றைய தினம் மன தைரியத்தின் மூலம் வெற்றி கிடைக்கும். உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். எதையும் உற்சாகத்துடன் கற்றுக்கொள்வதில் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். வீண் அலைச்சல் மற்றும் வீண் பயம் குறையும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், நீலம் மற்றும் அதிர்ஷ்ட எண்கள் 3, 5 ஆகும்.

தனுசு: அடுத்தவர்கள் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் சாமர்த்தியம் இன்று உங்களுக்கு உண்டாகும். எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்கள் ஆரஞ்சு, வெள்ளை மற்றும் அதிர்ஷ்ட எண்கள் 1, 3, 9 ஆகும்.

மகரம்: இன்று நீங்கள் வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். திட்டமிடுவதில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர்களின் ஆதரவும் நேசமும் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்புகளும் உண்டு. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்கள் வெளிர் நீலம், மஞ்சள் மற்றும் அதிர்ஷ்ட எண்கள் 4, 6 ஆகும்.

கும்பம்: இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் வாக்கு வன்மையால் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், பச்சை மற்றும் அதிர்ஷ்ட எண்கள் 3, 5 ஆகும்.

மீனம்: இன்று உத்தியோகஸ்தர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தால், மேலதிகாரிகள் கொடுத்த வேலையைச் சிறப்பாக முடிப்பார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் விலகும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்கள் வெள்ளை, பிரவுன் மற்றும் அதிர்ஷ்ட எண்கள் 2, 6 ஆகும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version