Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 மே 2026: திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்

பராபவ ஆண்டு, சித்திரை-27 (ஞாயிற்றுக்கிழமை)

நட்சத்திரம் : அவிட்டம் இரவு 9.01 வரை பிறகு சதயம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் சப்தாவர்ணம், திருவாய்மொழி சாற்று முறை வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருவீதியுலா திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம் திருவெள்ளறை ஸ்ரீ சுவேதாத்திரிநாதர் காலை பூந்தேரில் பவனி. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு. வேலூர் கோட்டை துர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம்.

சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு, ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம், வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன், புன்னை நல்லூர், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version