இன்றைய ராசிபலன்: பணவரத்து அதிகரிக்கும், பிரச்சனைகள் குறையும்!

இன்றைய ராசிபலன் கணிப்பு

புதிய ராசிபலன்: 14-07-2026 அன்று, உங்கள் புத்திசாலித்தனம் மேம்படும், எதிர்பார்த்த பணம் வந்து சேரும், மேலும் பிரச்சனைகள் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று வீண் பிரச்சனைகள் நீங்கி, மரியாதை மற்றும் அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து, வளர்ச்சி சிறப்பாக நடைபெறும். கூடுதல் லாபம் ஈட்ட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும். வேலைப்பளு குறையும். இருப்பினும், குடும்பத்தில் நிம்மதியைக் குறைக்கும் சில சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு, அதிர்ஷ்ட எண்கள் 2, 3.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவிகளும் கூடுதல் பொறுப்புகளும் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம் நீலம், பச்சை, அதிர்ஷ்ட எண்கள் 5.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்று திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். காரியங்களில் உள்ள தடைகள் நீங்கும். தாமதமான போக்கு மற்றும் வீண் அலைச்சல் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம் சிவப்பு, அடர் நீலம், அதிர்ஷ்ட எண்கள் 5, 6.

கடகம் ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவுகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம் நீலம், மஞ்சள், அதிர்ஷ்ட எண்கள் 1, 2.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். பொருட்களை பாதுகாப்பாக வைப்பது முக்கியம். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகரிக்கும். பயணம் செல்ல நேரிடலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள், அதிர்ஷ்ட எண்கள் 2, 9.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வீண் அலைச்சல், தடை, தாமதம் ஏற்படலாம். திடீர் நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள், சிவப்பு, அதிர்ஷ்ட எண்கள் 4, 6.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். புத்திசாலித்தனம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம் நீலம், அதிர்ஷ்ட எண்கள் 4, 6.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும், உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப்பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள், வெள்ளை, அதிர்ஷ்ட எண்கள் 9, 3.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புத்திசாலித்தனம் அதிகரிக்கும், எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம், பிரச்சனைகள் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு, அடர் நீலம், அதிர்ஷ்ட எண்கள் 3, 7.

மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம் சிவப்பு, வெளிர் நீலம், அதிர்ஷ்ட எண்கள் 5, 6.

கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்று பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனக்கவலை ஏற்படலாம். பிரயாணத்தில் தடங்கலை ஏற்படுத்தும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை, வெளிர் நீலம், அதிர்ஷ்ட எண்கள் 4, 5.

மீனம் ராசிக்காரர்களுக்கு இன்று வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். இதனால் வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு, பச்சை, அதிர்ஷ்ட எண்கள் 1, 7.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version