டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை www.tnpscexams.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வரும் செப்டம்பர் 27, 2026 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்த முதல்நிலைத் தேர்வு நடைபெறும். இது கொள்குறி வகைத் தேர்வாக (Objective Type) நடத்தப்படுகிறது. இந்த முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், நான்கு தாள்களைக் கொண்ட விரிந்துரைக்கும் வகை முதன்மைத் தேர்வை எழுத வேண்டும்.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இறுதியாக நேர்காணல் நடைபெறும். இவ்வாறு மொத்தம் மூன்று கட்டங்களாக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 23, 2026 அன்று வெளியிடப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் என்பது கல்வித் தகுதியாகும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version